செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 16, 2022

செய்தியும், சிந்தனையும்....!

எந்த உயரம்?

* ராமரின் லட்சியங்கள் நாட்டை புதிய உயரத்துக்கு இட்டுச் செல்லும்.

- ஒன்றிய அமைச்சர் நிதின்கட்காரி

>> வருண பேத அடிப்படையில் சூத்திரன் என்று கூறி சம்பூகனை வெட்டிக் கொன்றானே ராமன் - அந்த உயரமா?

எது கட்டாயம்?

* கட்டாய மத மாற்றத்தால் நாட்டுக்கு அச்சுறுத்தல்.

- உச்சநீதிமன்றம் கருத்து

>> இந்தியாவில் வாழும் அனைவரும் தங்களை இந்துக்கள் என்று ஒப்புக்கொள்ளவேண்டும் என்று சங் பரிவார்த் தலைவர்கள் கூறி வருகிறார்களே?

குருகுலமோ!

* கருநாடகத்தில் அரசுப் பள்ளிக் கட்டடங்களில் காவி வர்ணம் பூசும் திட்டம். 

>> அரசு பணியாளர்கள் காவி உடையுடன் வரவேண்டும் என்று அடுத்த உத்தரவு வரலாம்!

No comments:

Post a Comment