மருத்துவத்துறையில் இளங்கலை முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 30, 2022

மருத்துவத்துறையில் இளங்கலை முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப் பட உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத் தில் தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் இணை இயக்குநர் நலப்பணிகள் அலு வலகத்தில் கீழ்கண்ட பணியிடங்கள் நிரப் பப்பட உள்ளன. மொத்தம் 3 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள் ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 02.12.2022க்குள் விண்ணப்பித்துக் கொள் ளுங்கள்:

Physiotherapist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Bachelor of Physiotherapy (BPT) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,000

Account Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :  : B.Com Degree with Tally   படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 16,000

Sector Health Nurse/Urban Health Manager

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : : M.Sc. Nursing in Community Health / Paediatrics /Obstetrics & Gynacology   படித்திருக்க வேண்டும். அல்லது B.Sc. Nursing  மற்றும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 25,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப் பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : கவுரவச் செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.12.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2022/11/2022111838.pdf  என்ற இணைய தளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

No comments:

Post a Comment