பெண்களே பாடை தூக்கி ஹிந்து மத சடங்குகளை வேரறுத்து நடந்த அப்பிநாய்க்கன்பட்டி பார்வதி செவத்தான் இறுதி நிகழ்வு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 14, 2022

பெண்களே பாடை தூக்கி ஹிந்து மத சடங்குகளை வேரறுத்து நடந்த அப்பிநாய்க்கன்பட்டி பார்வதி செவத்தான் இறுதி நிகழ்வு!

தருமபுரி, நவ.14 கொள்கை வழியில் தாயாரின் இறுதி நிகழ்வை நடத்தி கொள்கை உறுதி காட்டிய குடும்பத் தினரை அனைவரும் பாராட்டினர்.

ஊற்றங்கரை ஒன்றியம் அப்பி நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள அண்ணாமலை, சந்திரா, எல்லம்மாள், மறைந்த தீர்த்தகிரி மற்றும் ஊற்றங் கரை ஒன்றிய திராவிடர் கழக செய லாளர் செ.சிவராஜ் ஆகியோர்களது  தாயாரும், செவத்தான் அவர்களின் வாழ்விணையருமான பார்வதி செவத்தான்  அம்மையார் 07.11.2022 காலை 5 மணி அளவில்  அப்பி நாயக்கன்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.

தந்தை பெரியார், அண்ணல் அம் பேத்கர் காட்டிய வழியில் எவ்வித சடங்கு சம்பிரதாயங்களுமின்றி ஹிந்து மதச் சடங்குகளைப் புறக் கணித்து, எளிய முறையில் கொள்கை வழியில் உணர்வுபூர்வமாக குடும் பத்தினர் நடத்தவேண்டும் என்று விரும்பியதை உறவினர்களும், ஊரில் உள்ள பொதுமக்களும் ஏற்றுக் கொண்டு ஒத்துழைப்பு கொடுக்க, எவ்வித மூட சடங்குகளுமின்றி உணர்வுபூர்வமாக இறுதி நிகழ்வு நடைபெற்றது

பார்வதி செவத்தான் அம்மையார் அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகம் சார்பில், கழக சொற் பொழிவாளர் பழ.வெங்கடாசலம் தலைமையில் மாலை வைக்கப்பட்டு, ஒலி முழக்கம் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது. அம்மையாரின் இறுதி நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் அறிவரசன், தருமபுரி மண்டல செயலாளர் பழ.பிரபு, ஊற்றங்கரை ஒன்றிய தலை வர் செ.பொன்முடி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் தணிகை ஜி.கருணாநிதி, ஊற்றங்கரை ஒன்றிய அமைப்பாளர் அண்ணா.அப்பாசாமி, ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க உறுப்பினர் ஆசிரியர் பெ.ராமசாமி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் சித.அருள், சித. வீரமணி, இரமா.சகாதேவன், வெங்க டேசன்,  தந்தை பெரியார்  சமூக காப்பு அணியின் மேனாள் பயிற்றுநர் அழகுமணி, தமிழ்க்குடிமகன், ரகு நாதன் உள்ளிட்ட  ஏராளமான கழகத் தோழர்களும் விடுதலை சிறுத்தை கள் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம், பொது உடைமை இயக்கம், விடுதலை வாசகர் வட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த தோழர்களும் பங்கேற்றனர்.

இறுதி ஊர்வலம் நடைபெறு வதற்கு முன்பாக நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் திராவிடர் கழ கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த பொறுப்பாளர்கள் உரையாற் றிய பின்னர் அம்மையாரின் உடல்- ஒலி முழக்கங்கள் எழுப்பி, பெண் களால் பாடை கட்டி எடுத்து செல் லப்பட்டது .எந்த விட சடங்கும் நடத் தப்படாமல் எளிய முறையில் கொள்கை அடிப்படையில் உடலடக் கம் செய்யப்பட்டது

அப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் முதன்முறையாக  சடங்கு சம்பிரதா யங்கள் இன்றி கொள்கை அடிப் படையில் நடைபெற்ற இந்த இறுதி ஊர்வலத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய குடும்பத்தினர், ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் திராவிடர் கழகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது

சமூக அமைப்பில் மாற்றங்களும், புரட்சியும் தானாக நடைபெறுவ தில்லை. ஒவ்வொரு சமூக மாற்றத் திற்குள்ளும்  ஒரு தனி மனிதனின் கொள்கை உறுதியும்- விடாப்பிடி யான போராட்டமும் பொதிந்து கிடக்கிறது. அப்படி தனது இல்ல நிகழ்வில் எவ்வித சடங்கிற்கும் அனுமதி இல்லை என்று உறுதி காட்டிய ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் செ.சிவ ராஜை அனைவரும் பாராட்டினர்.

No comments:

Post a Comment