ஈரோடு - கோபி செட்டிபாளையத்தில் கழகத் தோழர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு - சந்தா வழங்கினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 22, 2022

ஈரோடு - கோபி செட்டிபாளையத்தில் கழகத் தோழர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு - சந்தா வழங்கினர்

ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் வடக்கு பேட்டையில் 22.11.2022 மாலை நடைபெறும் தந்தை பெரியார் 144வது பிறந்த நாள் மற்றும் திராவிடர் கழக முதல் பொருளாளர் பழைய கோட்டை இளைய பட்டக்காரர் தளபதி ந.அர்ச்சுணன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து ஏற்காடு விரைவுவண்டி யில் ஈரோடு வருகை புரிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஈரோடு தொடர்வண்டி நிலையத்தில் மாநில கழக அமைப்புச் செயலாளர்.ஈரோடு.த.சண்முகம் தலைமையில் சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.இந் நிகழ்ச்சியில் பேராசிரியர்.ப.காளிமுத்து,ஈரோடு மண்டல கழக தலைவர் இரா.நற்குணன்,ஈரோடு கழக மாவட்டத் தலைவர்.கு.சிற்றரசு,மாவட்டச் செயலாளர்.மா.மணிமாறன், கண.குறிஞ்சி,ஈரோடு மாவட்ட தொழிலாளரணி செயலாளர்.தே.காமராஜ்,கோபி கழக மாவட்டத் தலைவர்.ந.சிவலிங்கம்,மாவட்டச் செயலாளர்.மு.சென்னியப்பன், ஈரோடு மாநகர் செயலாளர்.வீ.தேவராஜ்,கோ.திருநாவுக்கரசு,சா.ஜெபராஜ் செல்லத்துரை,பவானி வட்டத் தலைவர்.அ.அசோக்குமார், திராவிட இயக்கபற்றாளர்.நம்பியூர்.எஸ்.சண்முகசுந்தரம்,ஈரோடு சி.நா.கல்லூரி பேராசிரியர்.வேணுகோபால் உள்பட கலந்து கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்றனர்.


ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என். நல்லசிவம்  விடுதலை ஆயுள் சந்தா ரூ.20,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: கோபி நகர மன்ற தலைவர் என்.ஆர். நாகராஜன், மணிமாறன் (தி.மு.க.), வழக்குரைஞர் சென்னியப்பன், தமிழர் தலைவருடன் சத்தியமங்கலம் நகர மன்ற தலைவர் ஜானகி  மற்றும் கோபி கவுன்சிலர்கள் சரோஜா, மகேஸ்வரி, செல்வி, குமார் சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டப் பொருளாளர் நம்பியூர் மிசா தங்கவேல்  சந்தா தொகை ரூ.2,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்:  விசிக தோழர்கள்.


ஈரோடு பொன் முகிலன் - செல்வி ஆகியோரின் மகன் செ.பொ. கவுதம் பிரபாகரன் - கி.தமிழரசி ஆகியோரின் மணவிழா மகிழ்வாக விடுதலை ஆண்டு சந்தா ரூ.2,000த்தை  வழஙகினர். (19.11.2022)


நம்பியூர் காங்கிரஸ் வட்டார செயலாளர் ரத்னம் தமது பிறந்த நாள் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பரிசு வழங்கி வாழ்த்து பெற்றார் 
கோபி சீனிவாசன் விடுதலைக்கு நன்கொடையை  தமிழர் தலைவரிடம் வழங்கினார். 
படம்:2கோபி சீனிவாசன் விடுதலைக்கு நன்கொடையை  தமிழர் தலைவரிடம் வழங்கினார். 


ஆரியபாளையம் பேரூராட்சி செயலாளர் வழக்குரைஞர் 
ஏ.எஸ். செந்தில்நாதன் ஓர் ஆண்டு சந்தா தொகை ரூ.2000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பி. சண்முகசுந்தரம் தமிழர் தலைவருக்கு சால்வை அணிவித்தார்.No comments:

Post a Comment