ஜாதி ஒழிப்பு போராளி ஜெயலட்சுமி கண்ணாயிரம் மறைந்தாரே!!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

ஜாதி ஒழிப்பு போராளி ஜெயலட்சுமி கண்ணாயிரம் மறைந்தாரே!!!

சவுந்திரவல்லிப்பாளையம் கிராமம், மேனாள் தலைமையசிரி யரும், பகுத்தறிவாளரும், ஜாதி ஒழிப்பு போராளியுமான சுயமரி யாதைச் சுடரொளி பெ.கண்ணாயி ரம் அவர்களின் இணையருமான ஜெயலட்சுமி கண்ணாயிரம் அவர் கள் உடல்நலமின்மையால்,இன்று 12-11-2022 விடியற்காலை 4-30 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகி றோம். 

கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள். 10.7.1972 அன்று சவுந்திரவல்லிபாளையத்தில் தந்தை பெரியாரை அழைத்து, கோவில் திருவிழாவின் போது பாதிக்கப்பட்ட நம் தோழர்களுக்கு, நல்லது நடக்க வேண்டி கூட்டம் போட்டு கலகக்காரர்களைக் கட்டுப்படுத்தியவர்கள். மாணவர்களுக்கு கல்வி உதவிகளைச் செய்தவர்கள்.

தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளை இப்பகுதியில் அப்போதைய திராவிடர் கழகப் துணைப் பொதுச் செயலாளர், சுயமரியாதைச் சுடரொளி மானமிகு கோ.சாமிதுரை அவர்களுடன் இணைந்து பரப்பியவர்கள். மறைந்த ஜெயலட்சுமி கண்ணாயிரம் அவர்கள் திராவிடர் கழகச் சொற்பொழிவாளராகவும் விளங்கியவர். இவர்களுடைய குடும்பத்தினர் அறிவொளி, வளவன், அன்பொளி ஆகியோர் உயர் பதவிகளில் சிறந்து விளங்குகின்றனர். மாவட்ட கழகத்தின் சார்பில் தலைவர் ம.சுப்பராயன் தலைமையில், கழகத்தோழர்கள் மறைந்த அம்மையாருக்கு மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினார்கள்.

- - - - - 

தாராபுரம் கழக மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் க.வேலுமணி தாயார் மருதாயம்மாள் அவர்கள் 11.11.2022 அன்று மாலை 6 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.  மறைந்த மருதாயம்மாள் குடும்பத்தில் அனைவரும் பகுத்தறிவு நெறியை ஏற்று வாழ்ந்தவர்கள். அவரின் இறுதி நிகழ்வு 12.11.2022 பகல் 12 மணிக்கு கணியூர் - சோத்தம் பட்டி கிராமத்தில் நடைபெற்றது. கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment