தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் புதிய தலைவர் நீதிபதி பாரதிதாசன் (ஓய்வு) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 18, 2022

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் புதிய தலைவர் நீதிபதி பாரதிதாசன் (ஓய்வு)

சென்னை, நவ. 18- தமிழ்நாடு பிற்படுத் தப்பட்டோர் ஆணையம் திருத்தி யமைக்கப்பட்டுள்ளது. ஆணையத் தின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வீ.பாரதி தாசனை தமிழ்நாடு அரசு நியமித் துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று (17.11.2022) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது:

தமிழ்நாடு பிற்படுத்தப்பட் டோர் ஆணையம், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக பணி யாற்றிய ஓய்வுபெற்ற நீதிபதி எம்.தணிகாசலம் மற்றும் உறுப்பினர் கள், தங்களது பதவி விலகல் கடிதங் களை அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர். அவர்களது பதவி விலகல் ஏற்கப் பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழ்நாடு பிற் படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக சென்னை உயர் நீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதி 

வீ.பாரதிதாசன் நியமிக்கப்பட்டு உள்ளார். உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற அய்ஏஎஸ் அதிகாரிகளான ச.கருத்தையா பாண்டியன், 

மு.ஜெயராமன், இரா.சுடலைக் கண்ணன், கே.மேக்ராஜ், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக மேனாள் பதிவாளர் பெரு.மதியழகன் மற்றும் திருப்பூர் மாவட்டம் கருப்பண்ணன் மாரி யப்பன் கல்லூரி முதல்வர் எஸ்.பி. சரவணன் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment