ஹிந்து என்ற சொல்லுக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்? காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 8, 2022

ஹிந்து என்ற சொல்லுக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்? காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி கேள்வி

பெங்களூரு, நவ 8- ஹிந்து’ என்ற சொல்லுக்கும், இந் தியாவுக்கும் என்ன சம் பந்தம்? என்று காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி கருத்து தெரிவித்துள்ளார்.

பெலகாவி மாவட்டம் நிப்பானியில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:- 

பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஹிந்து, ஹிந்துத்துவா என்ற கொள் கையை முன்வைத்து அர சியல் செய்து வருகிறார் கள். ஆனால் ஹிந்து என்ற சொல் பார்சியன் மொழியை சேர்ந்தது. அந்த சொல் ஈரான், ஈராக், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்தது. ஹிந்து என்ற சொல்லுக்கும், இந்தியா வுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது?. ஹிந்து என்ற சொல்லின் அர்த்தம் மோச மானது. அந்த சொல் எங்கிருந்து வந்தது என் பதை தெரிந்து கொள்ள இணையத்திற்கு சென் றால் தெரிந்து கொள்ள லாம். ஹிந்து என்ற சொல் இந்தியாவுக்கு சேர்ந்தது அல்ல. இவ்வாறு சதீஸ் ஜார்கிகோளி பேசினார். 

No comments:

Post a Comment