பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியாதாம்: ஒன்றிய அரசு அடம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 9, 2022

பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியாதாம்: ஒன்றிய அரசு அடம்!

மதுரை,நவ.9- மக்கள் தொகை கணக் கெடுப்பின்போது பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாது என உயர்நீதிமன்றக் கிளை யில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

மதுரை மேலக்காலை சேர்ந்த தவ மணிதேவி, உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு விவரம் வருமாறு:

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப் படையில் 2001 இல் பிற்படுத்தப்பட்டோர்  மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய சமூகநீதித் துறை உத்தரவிட்டது. ஆனால், அதுபோல கணக்கெடுப்பு இதுவரை நடைபெறவில்லை. பிற் படுத்தப்பட்டோர்  மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் இட ஒதுக்கீடு சலுகை வழங்க முடியும்.

2021 மக்கள் தொகை கணக்கெடுப் பின்போது எஸ்.சி, எஸ்.டி போல் பிற் படுத்தப்பட்டோர்  மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி அகில இந்திய ஓபிசி ஒருங்கிணைப்புக்குழு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. கரோனா பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளி வைக்கப்பட்டது. எனவே, 2021 - மக்கள் தொகை கணக்கெடுப்பில் எஸ்சி, எஸ்டி மக்கள் தொகை கணக்கெடுப்பு போல் பிற்படுத்தப்பட்டோர்  மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி அகில இந்திய ஓபிசி ஒருங்கிணைப்பு குழு அளித்த மனுவை பரிசீலித்து உரிய நட வடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகா தேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஒன் றிய அரசு சார்பில், மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது பிற்படுத்தப் பட்டோர்  பிரிவு அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாது என ஒன்றிய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. கூடுதல் பதில் மனு தாக் கல் செய்ய அவகாசம் வேண்டும் எனக் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், பிற்படுத் தப்பட்டோர்  பிரிவு அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த முடியாது என ஒன்றிய அரசு எதன் அடிப்படையில் தெரிவிக்கிறது. 1951 இல் எடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவை தற்போது மக்களின் நலனுக்காக மாற்றி அமைக் கலாமே என்றனர். பின்னர், ஒன்றிய அரசு தரப்பில் கூடுதலாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசார ணையை நவ. 22 ஆம் தேதிக்கு நீதிபதி கள் ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment