தமிழ்நாடு அரசுக்கு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நன்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 11, 2022

தமிழ்நாடு அரசுக்கு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நன்றி

சென்னை,நவ 11 சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒருநாளின் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதற்கு தமிழ் நாடு சிறுகுறு தொழில் நிறுவனங்களின் தலைமை முதலமைச் சருக்கு நன்றி தெரிவித்துள்ளது இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2022-2023ஆம் ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10.09.2022 முதல் நடைமுறைப்படுத் தப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தப்பட் டுள்ள மின்சார கட்டணத்தின்படி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறு வனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டி உள்ளதால், ஒரு நாளின் உச்சப் பட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின் கட்டணத்தை (Peak Hour Charges)  குறைக்கும்படி பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதில் முக்கிய பங்காற்றுவதை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையினை ஏற்று குறைந்தழுத்த மின் இணைப்பு (Low Tension III-B)  கொண்ட தொழில் நிறுவ னங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத் தில் வசூலிக்கப்படும் மின்கட்டணத்தை 25 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக குறைக்கலாம் என முடிவு செய்து உரிய கொள்கை வழிகாட்டுதல் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இவ்வாறு மின் கட்டணத்தை குறைப்பதால் தமிழ் நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பயனடையும்’ என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது  மின்கட்டணக்குறைப்பிற்கு தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் (டான்ஸ்டியா) தலைவர் கே.மாரியப்பன்  தமிழ்நாடு முதலமைச் சருக்கும் மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கும் நன்றி தெரி வித்துள்ளார்.


No comments:

Post a Comment