பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனம் ஆளுநர் தலையிட முடியுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 26, 2022

பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனம் ஆளுநர் தலையிட முடியுமா?

ப்பி. டி. ட்டி ஆச்சாரி

கேரள அரசு பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர் பணி நியமனங்கள்  பல்கலைக் கழக மான்யக் குழுவின்  கட்டுப்பாடுகளை மீறி இருப்பதாகக் கூறி உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த இரண்டு தீர்ப்புகள் இந்தியா போன்ற கூட்டாட்சி நாடுகளின் உயர்கல்வி நடைமுறையில் முக்கியமான ஒன்றாகும்.

ஜி.கே. காத்விக் மற்றும் குஜராத் மாநில அரசுக்கு இடையேயான  வழக்கில் 2022 மார்ச் 3 அன்று அளித்த தீர்ப்பில், துணை வேந்தர்களின் நியமனத்தில் கல்வியாளர் தேடும் குழுவில் மூன்று பெயர்கள் கொண்ட பட்டியல் அளிக்க வேண்டும் என்ற மான்யக் குழுவின் 2018-ஆம் ஆண்டு விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்டதால், அவ்வாறு நியமிக்கப்பட்ட குஜராத் சர்தார் படேல் பல்கலைக் கழகதுணை வேந்தரின் நியமனம் செல்லாது என்று நீதிபதிகள் எம்.ஆர்.   மற்றும் பி.வி.நாகரத்தினா தீர்ப்பளித்துள்ளனர். மாநில அரசின் சட்டம் பல்கலைக் கழக மான்யக் குழுவின் கட்டுப்பாடுகளை மீறுவதாக இருப்ப தால்,  அந்த நியமனம் செல்லாது என்று தங்களின் தீர்ப்பில் அவர்கள் கூறியுள்ளனர்.

இரண்டாவது பேராசிரியர் சிறீஜித்துக்கும் முனைவர் ராஜசிறீக்கும் இடையேயான கேரள மாநில வழக்கில் திருவனந்தபுரம் அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் நியமனம் செல்லாது என்று எம்.ஆர். மற்றும் எம்.எம்.சுந்தரே நீதிபதிகளின் உச்சநீதிமன்ற அமர்வு 2022 அக்டோபர் 21 அன்று தீர்ப்பளித்தது. பல்கலைக் கழக மான்யக் குழுவின் பரிந்துரைக்கு மாறாக துணை வேந்தர்களின் நியமனத்தில் கல்வியாளர் தேடும் குழுவில் ஒரே ஒரு பெயர் பரிந்துரைக்கப்பட்டது என்பது; மான்யக்குழுவின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக இருப்பதே இதன் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், உச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்புகள் கேரள மாநிலத்தில் இதற்கு முன்பு நடக்காத பல நிகழ்வுகள் நிகழக் காரணமாகின. உச்ச நீதிமன்றத்; தீர்ப்பிற்கு எதிராக மற்றவேறு 11 பல்கலைக் கழக துணை வேந்தர்களின் நியமனங்களும் இருப்பதால், ஆளுநர் ஆரிப் மகமது கான் அந்த 11 துணை வேந்தர்களையும் பதவி விலக கேட்டுக் கொண்டார். இது பற்றிய வழக்கு ஒன்று கேரள உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆளுநரின் ஆணைப்படி இந்த துணை வேந்தர்கள் எவரும் பதவி விலகவில்லை. இடதுசாரி ஜனநாயகக் குடியரசின் கேரள ஆட்சிக்கும் ஆளுநருக்கும் இடையே நடந்து வரும் ஒரு போர் மேலும் தீவிரமடைவதற்கு, கேரள அரசு மீன் மற்றும் கடல் வள ஆய்வு பல்கலைக் கழகத்திற்கு செய்யப்பட்ட துணை வேந்தர் நியமனத்தை கடந்த அக்டோபர் மாதம் 14ஆம் தேதியன்று கேரள உயர் நீதி மன்றம் செல்லாது என்று அறிவித்ததன் காரணமாக இடதுசாரி ஜனநாயகக் குடியரசின் கேரள ஆட்சிக்கும் ஆளுநருக்கும் இடையே நடந்து வரும் போர் மேலும் தீவிரமடையக் கூடும்.

பிரச்சினையின் மய்யக் கரு என்ன?

இந்த இரு வழக்குகளிலும் உச்சநீதி மன்றத்தால் எழுப்பப்பட்ட கேள்வியே, பல்கலைக் கழக துணை வேந்தர்களின் நியமனம் பல்கலைக் கழக மான்யக் குழுவின் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டுமா அல்லது மாநில அரசின் சட்ட விதிகளின்படி செய்யப்பட வேண்டுமா என்பதுதான். ஒரு கூட்டாட்சி நடைமுறையில்;, இது போன்றதொரு கேள்வியை உச்சநீதிமன்றம் எழுப்பி இருப்பது வியப்பானதாகத் தோன்றக் கூடும். ஆனால், இந்திய அரசமைப்பு சட்டத்தின்  பொதுப் பட்டியலில் உள்ள ஒரு துறை தொடர்பான சட்டங்களை மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் இரண்டுமே  இயற்றலாம். கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால், இந்தக் கேள்வி மிகத் தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். 

சம்பந்தப்பட்ட பல்கலைக் கழக சட்டத்தின் கீழ் வேந்தரால் துணைவேந்தர் ஒருவர் நியமிக்கப்படுகிறார். ஆனால், தேடும் குழு ஒரே ஒருவர் பெயரை மட்டுமே பரிந்துரைத்திருப்பது, மூன்று முதல் அய்ந்து பெயர்களை பரிந்துரைக்க வேண்டுமென்ற பல்கலைக் கழக மான்யக் குழுவின் கட்டுப்பாட்டை மீறுவதாக இருப்பதால், மாநில சட்டவிதி செல்லாது என்று முடிவு செய்துள்ள உச்சநீதிமன்றம், ஒரு விசயம் பற்றி  மாநில அரசும், ஒன்றிய அரசும் தனித்தனி சட்டங்கள் இயற்றினால், ஒன்றிய அரசின் சட்டம்தான் செல்லும் என்றும் மாநில அரசின் சட்டம் செல்லாது என்ற அரசமைப்பு சட்டத்தின் 254 ஆவது பிரிவை இங்கே கொண்டு வந்திருக்கிறது.  இந்த வழக்கில் மாநில அரசு சட்டவிதி நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப் பட்ட ஒன்றிய அரசின் உயர் சட்டவிதியை மீறவில்லை. பல்கலைக் கழக மான்யக் குழுவின் கட்டுப்பாட்டை மட்டுமே மீறி இருக்கிறது. இப்போது நம் முன் மாநில சட்டமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஒரு புறமும், பல்கலைக் கழகம் என்னும் ஒரு சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட அமைப்பின் கட்டுப்பாடுகள் மற்றொரு புறமும் உள்ளன. சட்டமன்றத்தினால் இயற்றப்பட்ட  ஒரு சட்டத்துடன் ஒப்பிடும்போது, ஒரு சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஒரு அமைப்பின் விதிகளும் கட்டுப்பாடுகளும் மாநில சட்டத்தை விட உயர்ந்ததாக இருக்கமுடியாது.

இரண்டாவதாக, பல்கலைக் கழக மான்யக் குழு போன்ற, ஒரு சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட அமைப்பின் விதிகளும் கட்டுப்பாடுகளும் நாடாளு மன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ளன என்ற போதிலும், ஒரு சட்டம் இயற்றப்படும் நடைமுறைகள் அதில் பின்பற்றப்படவில்லை. சாதாரணமாக இது போன்ற விசயங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை இல்லை. ஒரு சட்டத்துடன் ஒப்பிடும்போது, விதிகளும் கட்டுப்பாடுகளும் சட்டத்தை விட உயர்ந்தவை அல்ல. விதிகள், கட்டுப்பாடுகளை அரசமைப்பு சட்டம், ஒரு சட்டத்துடன் சமன்படுத்துவதாக கற்பனை செய்து கொள்ள இயலாது.

மூன்றாவதாக, சட்டம் என்ற சொல்லுக்கு பொதுவான விளக்கத்தினை அரசமைப்பு சட்டம் அளிக்கவில்லை. அரசமைப்பு சட்ட 13 (2); பிரிவில் அளிக்கப்பட்டுள்ள கூடுதல் விளக்கம் அந்த சட்டப் பிரிவுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகும். மற்ற சட்டப் பிரிவுகளுக்கு அது பொருந்தாது. அதன் பொருள் என்னவென்றால், சட்டம் என்ற சொல்லில்,  அரசமைப்பு சட்ட 254; பிரிவின் நோக்கத்தில், விதிகள் கட்டுப்பாடுகளை சேர்க்க முடியாது என்பதுதான்.

நான்காவதாக, ஒரு ஒன்றிய சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஓரு குறைந்த தகுதி கொண்ட ஒரு அமைப்பின் விதிகளும் கட்டுப் பாடுகளும் சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை விட உயர்ந்தது என்று கூறுவது, கூட்டாட்சிக் கொள்கைகளை மீறுவதாக உள்ளது. அரசமைப்பு சட்டத்தினால் சட்டமன்றங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சட்டம் இயற்றும் அதிகாரத்தை மறுப்பதாக இருப்பதுமாகும் அது.

இறுதியாக, பல்கலைக் கழக மான்யக்குழு சட்டத்தின் எந்தப் பிரிவிலும், துணை வேந்தர் நியமனம் பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கவில்லை என்பதால், துணை வேந்தர் நியமனம் பற்றிய பல்கலை மான்யக் குழுவின் கட்டுப்பாடுகள், பல்கலை மான்யக் குழு சட்டத்தின் முக்கிய விதிகளுக்கு உட்பட்டவை அல்ல.

கட்டுப்பாடுகள் என்பவை தனிப்பட்ட சட்டங்கள் அல்ல.  தாய் சட்டத்தின் நோக்கங்களுக்கு உட்பட்டவை யாகத்தான் அவை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது சட்டத்தையே மீறுவதாகும். கட்டுப்பாடுகளை உருவாக்குவதற்கு மான்யக் குழுவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள சட்டத்தின் 26 ஆவது பிரிவை பரிசீலித்துப் பார்க்கும் போது, மான்யக்குழு சட்டம் இயற்ற இயன்ற கட்டுப்பாடுகளில் துணை வேந்தரின் நியமனம் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. அதனால், மாநில பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனம் பற்றி மான்யக் குழு சட்டப்படியான கட்டுப்பாடுகளை உருவாக்க மான்யக் குழுவிற்கு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்படியான அதிகாரம் மிக அவசரமாக பரிசீலனை செய்யப்பட வேண்டும்.

மாநில உரிமைகளுடன் 

தொடர்புடைய ஒரு பிரச்சினை

மாநில பல்கலைக் கழக சட்டங்கள் மான்யக் குழுவின் கட்டுப் பாடுகளை மீறுவதாக மேலே குறிப்பிட்ட வழக்குகளில் உள்ளன என்று முடிவு எடுக்கும் முன், மேலே குறிப்பிடப்பட்ட கட்டுப்பாடுகளை மீறியது என்ற கோட்பாட்டை உச்சநீதிமன்றம் பகுத்தாய்வு செய்யவில்லை. அது போன்ற முடிவுகளை மேற்கொள்ளும் முன், அரசமைப்பு சட்டத்தின் 254 ஆவது பிரிவு மிக ஆழமாகப் பகுத்தாய்வு செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், மாநில சட்டங்கள் ஒன்றிய அரசின் சட்டங்களை மீறியவையாக இருக்க முடியாதே அன்றி, உருவாக்கப்பட்ட கீழ்நிலை அமைப்பின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இருக்கவேண்டும் என்று கூற முடியாது. பல்கலைக் கழகக் கல்வியை நிர்வகிக்கும் மாநிலங்களின் உரிமை என்பதும் இந்தப் பிரச்சினையும் தொடர்புடையதாகும் என்பதால், அது பற்றி அதிக அளவிலான சிந்தனை மேற்கொள்ளப்பட வேண்டியது மிகமிக அவசியமானதாகும். அப்படியே விதி மீறல் ஏதேனும் இருந்தாலும் கூட, அந்த விதிகளை சரி செய்யவேண்டிய  கடமை நீதி மன்றத்துக்கு உள்ளது.

சத்யபால் ரெட்டிக்கும் - ஆந்திரபிரதேச அரசுக்கும் இடையே நடை பெற்ற ஒரு வழக்கில் 1994 இ;ல் தீர்ப்பு அளிக்கும்போது, முரண்பட்டதாகத் தோன்றும் சட்டவிதிகளை சரி செய்வதற்கான முயற்சிகள் அனைத்தையும் நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும். நல்லிணக்கம் கொண்ட ஒரு முடிவை மேற்கொள்ள நீதிமன்றம் பாடுபட வேண்டும். இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சோதனை, இரண்டு சட்டவிதிகளுக்கும் இடம் அளிக்கப்பட இயலுமா அல்லது இரண்டு சட்டங்களும் ஒன்று சேர்;ந்து இருக்க முடியுமா என்று பார்ப்பதுதான் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பெரும்பாலான வழக்குகளில் இது செய்யப்பட்டாலே விதி மீறலுக்காக எந்த ஒரு மாநில சட்டத்தையும் செல்லாது என்று அறிவிக்கும் தேவையே இருந்திருக்காது.

நன்றி: 'தி இந்து' - 18-11-2022

தமிழில் : த.க.பாலகிருட்டிணன்.

No comments:

Post a Comment