ஜி.எஸ்.டி. செலுத்துவதை நிறுத்துவோம் மம்தா பானர்ஜி எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 16, 2022

ஜி.எஸ்.டி. செலுத்துவதை நிறுத்துவோம் மம்தா பானர்ஜி எச்சரிக்கை!

கொல்கத்தா நவ 16 மாநிலத்தின் நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு வழங்கா விட்டால் ஜி.எஸ்.டி. செலுத் துவதை நிறுத்த வேண்டியிருக்கும் என்று மம்தா  தெரிவித்தார். 

கொல்கத்தா, மேற்கு வங்க மாநி லத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஜார்கிராம் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் மேற்கு வங்க முதல்- அமைச்சர்  மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், மாநிலத்தின் நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு செலுத்தவில்லை என்றால், சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) செலுத்துவதை நிறுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார். 

மேலும் ஒன்றிய அரசு மாநிலங்களின் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் அல்லது ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என்று அவர் கூறினார். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் (MGNREGA) வாயிலாக ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை வெளியிடவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், இது தொடர்பாக பழங்குடியினரை களத்தில் இறங்கி போராட அழைப்பு விடுத்தார். நம் முடைய நிதி நிலுவைத் தொகையைப் பெற மத்திய அரசிடம் மன்றாட வேண் டுமா? என்று கேள்வி எழுப்பிய மம்தா நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் பா.ஜ.க. அரசு ஆட்சியிலிருந்து விலக வேண்டும் என்று கூறினார்.


No comments:

Post a Comment