பதைபதைக்க வைக்கும் 10 விழுக்காடு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 16, 2022

பதைபதைக்க வைக்கும் 10 விழுக்காடு!

10 சதவிகித இடஒதுக்கீடு தீர்ப்பு இதயத்தில் விழுந்த இடி! அடி!!

இந்தத் தீர்ப்பு அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் அடங்கிய அடிக்கட்டுமான அம்சங் களுக்கே முற்றிலும் முரணானது!

மிகவும் தெளிவாகவே 16.11.1992இல் பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட உயர் ஜாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு ஆணை அறவே செல்லாது என்று திட்டவட்டமாகவே தீர்ப்பளித்து விட்டது.

முதலாவது அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொணர்ந்தபோது "Socially and Educationally"  என்று போடப்பட்டது.

குஜராத் மாநிலத்தில் உயர் ஜாதியினருக்கு இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது செல்லுபடியற்றது என 4.8.2016இல் அடிபட்டு விட்டது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார அளவு கோலுக்கு ஆதரவாக 5 வாக்குகளும், எதிராக 243 வாக்குகளும் பதிவாயின.

இடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல.

இந்தத் தீர்ப்பு சமூகநீதிக் கோட்பாட்டையே தகர்க்கும். ஒட்டு மொத்தமாக சமூகநீதி தத்துவத்தையே கேலிக்குள்ளாக்குகிறது.

மாதத்திற்கு ரூ.66 ஆயிரம் ஊதியம் வாங்குவோர் ஏழைகளா?

"உயர்ஜாதி ஏழை" நாள் ஒன்றுக்கு 2500 ரூபாய் வருமானம் உள்ளவர்.

5 ஏக்கர் பூமி வைத்திருப்போர் ஏழைகளா?

பொருளாதார அடிப்படையில் மட்டுமே உலகில் எந்த நாட்டிலும் இடஒதுக்கீடுகள் வழங்கப்படுவ தில்லை.

பசியுள்ள பஞ்சைப் பராரிகளுக்கான உணவை கொழுத்தவனுக்குப் போடுவது போன்ற அக்கிரமம் இது!

பெரியாரின் தடி நம்மைக் காக்குமா?

- பழநிசாமி, தெ. புதுப்பட்டி


No comments:

Post a Comment