தருமபுரியில் ஹிந்தி சமஸ்கிருதத்தை திணிக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 9, 2022

தருமபுரியில் ஹிந்தி சமஸ்கிருதத்தை திணிக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

தருமபுரி நவ. 9 தருமபுரி மாவட்ட திராவிடர் மாணவர் கழகம் சார்பில் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் ஹிந்தி, மற்றும் சமஸ்கிருதத் திணிப்பு ஆதிக்கத்தைக் கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தருமபுரி மாவட்ட திராவிட மாணவர் கழகம்  சார்பில் 4.11.2022ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் தருமபுரி தொலைபேசி நிலையம் அருகில் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் ஹிந்தி, சமஸ்கிரு தத் திணிப்பைக் கண்டித்து கண்டன ஆர்ப் பாட்டம் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ச. பூபதி தலைமையில் நடைபெற்றது. 

மாவட்ட மாணவர் கழக செயலாளர் ப.பெரியார் வரவேற்பு உரை ஆற்றினார்.  திரா விடர் கழக மாவட்ட. இளைஞர் அணி தலைவர் த.மு.யாழ்திலீபன், பொதுக்குழு உறுப்பினர் க.கதிர்,புலவர் இரா. வேட்ராயன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வினோத்குமார், ஒன்றிய இளைஞரணி செய லாளர் ம.சக்திவேல், கிளை அமைப்பாளர் கு.அரிகரன், அய்யனார், நகர இளைஞரணி செயலாளர் மு.அர்ஜுனன், மாவட்ட இளை ஞரணி துணைத் தலைவர் கண். இராமச் சந்திரன், கருநாடக மாநில மாணவர் அணி தலைவர் மா.முனியப்பன் ஆகியோர் முன் னிலை ஏற்றனர்.                               

மாவட்ட திராவிடர் கழக தலைவர் வீ.சிவாஜி, தருமபுரி நகர திமுக செயலாளர் நாட்டன் மாது  ஆகியோர் கண்டன ஆர்ப் பாட்டத்தை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார்.

மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் பீம.தமிழ்பிரபாகரன், கண்டனம் முழக்கமிட்டு உரையாற்றினார். 

இறுதியாக, 1937 ஹிந்தி போராட்டம் துவக்க முதல் இன்றைய ஹிந்தி திணிப்புப் போராட்ட வரலாற்றை நினைவு கூர்ந்தும், தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பி.ஜே.பி. அரசு செய்யும் கேடுகளையும், பட்டியலிட்டு ஒரு மொழியை அழித்து இன பண்பாட்டை அழிக்கவே ஹிந்தி சமஸ்கிருத திணிப்பை திட்டமிட்டு மத்திய ஒன்றிய அரசு செய்து வருகிறது. 

ஆனால், எந்த திணிப்பு நடத்தினாலும் தமிழ்நாட்டில் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் நடக்காது. மதவாத சக்திகள் கனவு பலிக்காது என திராவிடர் கழக தலைமைக் கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார்செல்வன் எழுச்சி உரையாற்றினார். 

இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக மண்டல தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் மா. செல்லதுரை, மண்டல மாணவர் கழக செயலாளர் இ. சமரசம், மண்டல ஆசிரியரணி அமைப்பாளர் இர.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் பெ.கோவிந்தராஜ், விவசாய அணி தலைவர் மு.சிசுபாலன், மாவட்டத் துணைச் செயலாளர் கு. சரவணன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் க.சின்னராஜ், செய லாளர் ம.சுதா, மாவட்ட தொழிலாளரணி செயலாளர் இரா.சேட்டு, மேனாள் மாணவர் கழக செயலாளர்  ஆனந்தன், மேனாள் நகர செயலாளர் வினோ வடிவேல், கடத்தூர் ஒன்றிய கழகத் தலைவர் பெ. சிவலிங்கம், மாணவர் கழக தோழர்கள் வேதம்பட்டி புதூர் வினோத்குமார், நிதிஷ்குமார், ராகுல், திருப் பதி, முகிலன், குணசீலன், முத்துக்குமரன், வல்லரசு, வாசி கவுண்டர் தோழர்கள் தமிழ ரசன், சக்திவேல், வெங்கடசமுத்திரம் தோழர் சாய்குமார், தாதனூர்புதுர் தோழர் ஆ.பிரதாப், பையர் நத்தம் தோழர் அய்யனார் ஆகியோர்  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 

இறுதியாக மா.நிதிஷ்குமார் நன்றி கூறி னார்.

தஞ்சை பெரியார் செல்வன் பேச்சை கேட்க தொலைபேசி நிலையம் பணியாளர் கள், வணிகர்கள் அரசியல் கட்சியினர்  பொது மக்கள் என ஏராளமானோர் கூடியிருந்து கண்டன உரையை கேட்டனர்.   

No comments:

Post a Comment