சீரிய சிந்தனையாளர்-போராளி-ஆசிரியர் சி.வேலு மறைவுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல் - வீர வணக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 26, 2022

சீரிய சிந்தனையாளர்-போராளி-ஆசிரியர் சி.வேலு மறைவுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல் - வீர வணக்கம்

பட்டுக்கோட்டை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகப் புரவலரும், பொதுவுடைமை, பெரியாரியல் சிந்தனையாளரும் சிறந்த உரிமைப் போராளியும், மனிதநேயருமான நெடுவாசல் ஆசிரியர் சி. வேலு (வயது 69) பேராவூரணி) அவர்கள் நேற்று (25.11.2022) மதியம் திடீரென மறைந்தார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சிக்கு ஆளானோம்!

சிறந்த பண்பாளர்; அரியதோர் ஆய்வாளர்; தான் பிறந்த மண்ணின் பெருமையைப் பற்றி பல கோணங்களில் ஆய்வு செய்து 300 பக்கங்கள் கொண்ட நூல் ஒன்று எழுதியவர்-சீரிய எழுத்தாளர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத் திணிப்பை எதிர்த்து போர்க் குரல் கொடுத்து-மக்களைத் திரட்டி - தடுத்து நிறுத்திய கடமை வீரராக திகழ்ந்த நல்லாசான்!

அப்படிப்பட்ட மாமனிதரை இயற்கையின் கோணல் புத்தி இப்படி பறித்துக் கொண்டதே!

அய்யகோ கொடுமை?

எளிதில் ஈடு செய்ய இயலாத பேரிழப்பு - அவர்தம் குடும்பத்திற்கு மட்டுமல்ல, இயக்கங் களுக்கு மட்டுமல்ல, அவ்வட்டார மக்களுக்கும் கூடத்தான்.

அவரை இழந்து துயருறும் அவர்தம் குடும்பத் தினர், கொள்கைக் குடும்பத்தார், ஊர்த் தோழர்கள் - உறவினர் அனைவருக்கும் ஆறுதல்  கூறி, அவருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து ஆறுதல் அடைகிறோம்!

அவருக்கு நமது இயக்கத்தின் வீர வணக்கம்.

கி. வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம்  

26.11.2022 

குறிப்பு: மறைந்த ஆசிரியர் வேலு குடும்பத்தினரி டம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அலை பேசியில் தொடர்பு கொண்டு இரங்கலையும் ஆறு தலையும் தெரிவித்தார்.

ஆசிரியர் சி.வேலு அவர்களின் விருப்பப்படி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரிக்கு உடற்கொடை அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment