Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
கோத்ரா ரயில் எரிப்பு - நடந்த பின்னணி என்ன?
November 26, 2022 • Viduthalai

குஜராத் தேர்தலை மனதிற் கொண்டு திட்டமிடப்பட்ட ஒன்று! 

குஜராத் மேனாள் முதலமைச்சர் வகேலா பகிரங்க குற்றச்சாட்டு

அகமதாபாத், நவ 26 கோத்ரா ரயில் எரிப்பு 2002 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்காக மோடியால் திட்டமிட்டு செயல் படுத்தப்பட்டது என்று மேனாள் காங் கிரஸ் முதலமைச்சர் வகேலா பகிரங்கமாக குற்றஞ்சாட்டிள்ளார்

கோத்ரா ரயில் எரிப்பு 2002 சட்ட மன்றத் தேர்தல் வெற்றிக்காக மோடி மற்றும் பாஜகவினரால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது என குஜராத் மாநில மேனாள் காங்கிரஸ் முதலமைச்சர் ஷங்கர்சிங் வகேலா  பரபரப்பு குற்றச் சாட்டை சுமத்தி உள்ளார். இது பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில், கரசேவகர்கள் வந்த இரு பெட்டிகளில் சிலர் தீவைத்தனர். இந்த சம்பவத்தில், 59 கரசேவகர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர்.  

 இந்த வன்முறைக்கு காரணம் முஸ்லிம்கள் என கூறப்பட்டது. இதனால், அங்கு இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பலர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. ரயில் எரிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 31 பேரைக் குற்றவாளிகள் என தீர்ப்பளித்திருந்தது. இதில் 20 பேர் ஆயுள் தண்டனையும், 11 பேர் மரண தண்டனையும் பெற்றனர். 11 பேரின் மரண தண்டனையையும் குஜராத் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இந்த விவகாரம் தற்போது நடைபெற உள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலித்து வருகிறது.

குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதி என இரு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு காங்கிரஸ், பாஜக, ஆம்ஆத்மி, என மும்முனை போட்டி நிலவி வருகிறது.

பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்காக..

இந்த நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ள மாநில மேனாள் முதலமைச்சரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷங்கர்சிங் வகேலா,  கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக பரபரப்பு தகவல்களைக் கூறியுள்ளார். 2002 சட்டமன்றத் தேர் தலில் மோடி மற்றும் பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக முன்கூட்டியே திட்டமிடப் பட்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்  செயல்படுத்தப்பட்டது  எனக் குற்றம் சாட்டி உள்ளார். கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு சம்பவத்தில், ரயில் பெட்டி உள்ளே இருந்துதான் எரிக்கப்பட்டது, வெளியில் இருந்து அல்ல எனக் கூறியதுடன்,  தேர்தல் ஆதாயத்துக்காகவே கோத்ரா கலவரம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வர, கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் பயணித்த  59 பேர் 2002 பிப்ரவரி 26 அன்று எரித்துக் கொல்லப்பட்டனர்.  கோத்ரா ரயில் எரிப்பு 2002 சட்ட மன்றத் தேர்தலில் மோடி மற்றும் பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக முன்கூட்டியே திட்டமிடப் பட்டு செயல்படுத்தப்பட்டது. பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக வகுப்புவாத கலவ ரத்தை உருவாக்க திட்டமிட்டு செய்யப் பட்டது எனக் குற்றச் சாட்டினார்.

மார்பி பால விபத்து

இதனிடையே, 141 பேர் உயிரிழந்த மார்பி பால விபத்து (#MorbiBridgeCollapse) தொடர்பாக தானாக முன்வந்து வழக்கைத் தொடங்குமாறு குஜராத் உயர் நீதி மன்றத் தின் தலைமை நீதிபதிக்கு மூத்த தலைவரும், குஜராத் மேனாள் முதலமைச்சருமான சங்கர்சிங் வகேலா கோரிக்கை விடுத்துள் ளார். சங்கர்சிங் வகேலா குஜராத் மாநில மேனாள் முதலமைச்சர் மற்றும் மாநில காங்கிரஸ் மேனாள் தலைவர் ஆவார். ஒன்றிய அரசில் மன்மோகன் சிங் ஆட்சி யில் ஒன்றிய அமைச்சராகவும் பதவி வகித் துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai
ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணம்
February 02, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn