கோர விபத்தில் சிக்கியவர்களுக்கு நீதி வேண்டாமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 5, 2022

கோர விபத்தில் சிக்கியவர்களுக்கு நீதி வேண்டாமா?

குஜராத் மோர்பி தொங்கு - பால விபத்தில் அதில் சிக்கி 150க்கும் மேற்பட்டவர்கள் இறப்பு குறித்து பரபரப்பாக ஒரே ஒரு நாள் பேசப்பட்டு பிறகு அனைத்தும் மறக்கடிக்கப்பட்டது, 

படேல் சிலைக்கு பால் ஊற்றுவதும், எலிகாப்டரில் இருந்து மலர் தூவுவதிலும் நிழற்ப்படக்காரர்கள் சூழ மோடி "பிஸி"யாகிவிட்டார். 

அப்படி என்றால் பாலம் இடிந்து விழுந்த கோரவிபத்தில் சிக்கியவர்களுக்கு நீதி வேண்டாமா? குற்றவாளிகள் மீது நடவடிக்கை என்ன என்று கேட்டால், இதோ பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்கின்றனர். 

ஆனால், இவர்கள் மூவருமே அந்த நிறுவனத்தின் காவலாளிகள் என்று ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

தொங்குபாலம் அறுந்து விழுந்து 150க்கும் மேற்பட்ட உயிர்பலிக்கும், கட்டுமான ஒப்பந்த நிறுவனத்தில் பணி புரியும் மூன்று காவலாளிகளுக்கும் என்ன தொடர்பு என்றுதான் தெரியவில்லை!


No comments:

Post a Comment