நரோடாபாட்டியா கொலைகார கும்பலைச் சேர்ந்தவரின் மகளுக்கு பாஜக சீட் வழங்கியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 13, 2022

நரோடாபாட்டியா கொலைகார கும்பலைச் சேர்ந்தவரின் மகளுக்கு பாஜக சீட் வழங்கியது

காந்திநகர், நவ.13 நரோடாபாட்டியா படுகொலை என்பது மிகவும் கொடூர மானது என்று உச்சநீதிமன்றமே கூறி யுள்ள நிலையில், அந்தப் படுகொலை களைச் செய்த கும்பலில் ஒருவரின் மகளுக்கு  குஜராத் தேர்தலில் போட்டி யிட பாஜக சீட் வழங்கியுள்ளது.  

2002 ஆம் ஆண்டு குஜராத் மாநி லத்தில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் உயிரிழந்தனர். குஜராத் கலவரத் தின் போது அம்மாநிலத்தின் நரோடா பட்டியா என்ற நகரிலும் கலவரம் வெடித் தது. நரோடாபாட்டியா என்ற இடத்தில் நடந்த கலவரத்தில் இருந்து தப்பி பாதுகாப்பான இடம் என்று காவல்துறை கூறிய இடத்தில் தங்கி இருந்த மக்களை கொடூரமாகக் கொலை செய்து எரித் தனர். இதில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், அவரது குடும்பமும் கொல்லப்பட்டனர். அந்த நிகழ்வில் 97 இஸ்லாமியர்கள்  கொல்லப்பட்டனர்.

நரோடா பாட்டியா கலவரத்தில் மனோஜ் குல்கர்னி உள்பட 32 பேர் குற்றவாளிகள் என 2012 ஆம் ஆண்டு அகமதாபாத் தீர்ப்பளித்தது. மனோஜ் குல்கர்னிக்கு ஆயுள் தண்டனை விதிக் கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி மனோஜ் குல்கர்னி தொடர்ந்து பிணையில் வெளியில் சுதந் திரமாக சுற்றி வருகிறார்.

இதனிடையே, 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் 2 கட் டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட் டுள்ளது. முதற்கட்ட தேர்தல் டிசம்பர் ஒன்றாம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 5 ஆம் தேதியும் நடை பெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் குஜராத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 166 தொகுதிக் கான வேட்பாளர் பட்டியலை 2 கட்டங் களாக பாஜக வெளியிட்டுள்ளது. இந் நிலையில், பாஜக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் குஜராத் கலவர வழக்கு குற்றவாளியான மனோஜ் குல்கர்னியின் மகள் இடம்பெற்றுள்ளார். மனோஜ் குல்கர்னியின் மகள் பயல் குல்கர்னி. 30 வயதான பயல் குல்கர்னி மருத்துவர் ஆவார். அகமதாபாத் நகரில் குர்குல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயல் குல்கர்னி மருத்துவராக பணியாற்றி வருகிறார். பயல் குல்கர்னியை நரோடா தொகுதி யில் வேட்பாளராக பாஜக களமிறக்கி யுள்ளது. குஜராத் தேர்தலில் போட்டியிட பாஜக சீட் வழங்கியதை தொடர்ந்து மருத்துவரான பயல் குல்கர்னி நரோடா தொகுதியில் பிரச்சாரத்தில் குதித்துள் ளார்.

No comments:

Post a Comment