முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு: பொறியியல் கல்லூரி சேர்க்கை 93,571 இடங்கள் நிரம்பின - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 15, 2022

முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு: பொறியியல் கல்லூரி சேர்க்கை 93,571 இடங்கள் நிரம்பின

சென்னை நவ. 15- பொறியியல் படிப்புகளில் சேருவதற் கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி தொடங்கியது. 4 சுற்றுகளாக இந்த கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து பொதுப் பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவர் களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மாணவர்களுக்கு நடந்தது. 3ஆவது சுற்று கலந்தாய்வு நிறைவில், பொதுப்பிரிவில் 53 ஆயிரத்து 874 இடங்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 5 ஆயி ரத்து 99 இடங்களும் நிரம்பி இருந்தன.

இந்தநிலையில் 4ஆவது சுற்று கலந்தாய்வும் நிறைவு பெற்றது. இதில் பொதுப்பிரிவில் 30 ஆயிரத்து 938 இடங்களும், அரசுப் பள்ளி மாணவர் களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 3 ஆயிரத்து 660 இடங்களும் நிரம்பின. இதன்படி முதற்கட்ட கலந்தாய்வு முடிந்து இருக்கிறது. மொத்தம் உள்ள 1 லட்சத்து 54 ஆயிரத்து 278 இடங்களில், 93 ஆயிரத்து 571 இடங் களில் மாணவ-மாணவிகள் சேர்ந்து இருக்கின்றனர். 

இதன்மூலம் 60 ஆயிரத்து 707 இடங்கள் தற்போது காலியாக உள்ளன. கடந்த ஆண்டில் முதல் கட்ட கலந்தாய்வு நிறைவின்போது, 88 ஆயிரத்து 596 இடங்கள் நிரம்பி இருந்தன. அந்த வகையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 4 ஆயிரத்து 975 இடங்கள் அதிகமாக நிரம்பி இருப்பது புள்ளி விவரத் தில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment