குஜராத் மாநிலத்தில் மோடிக்கு எதிர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 15, 2022

குஜராத் மாநிலத்தில் மோடிக்கு எதிர்ப்பு

காந்திநகர், நவ. 15- குஜராத் மாநிலம் அஞ்செலி என் கிற ரயில் நிலையத்தில் கரோனா ஊரடங்கு காலத்தில் நிற்காமல் சென்ற ரயில் சேவையை மீண்டும் தொடர வேண் டும். அந்த ரயில் நிலையத் தில் அந்த தடத்தில் இயக் கப்படுகின்ற ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்கிற கோரிக்கையை ஒன்றிய பாஜக அரசிடம் பலமுறை முன்வைத்தும் ஒன்றிய பாஜக அரசு, ரயில்வேத்துறை, மாநில பாஜக அரசு செவி சாய்க்க வில்லை. இதனால் வெகுண்டெழுந்த அஞ்செலி ரயில் நிலையத்தை சுற்றியுள்ள சுமார் 18 கிராம மக்கள் தற்பொ ழுது நடைபெற உள்ள அம்மாநில சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்து, அதில் தீவிர பரப்புரையும் மேற் கொண்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் 182 சட்டப்பேரவை தொகு திகளுக்கான தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிக ளில் இரண்டு கட்டங் களாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக் கப்படும் முன்பே பாஜக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தது.

தற்போது தேதி அறி விக்கப்பட்ட நிலையில் அனைத்து கட்சிகளும் அனைத்து தொகுதிகளி லும் தங்களது பிரச்சா ரத்தை தீவிரமாக முன் னெடுத்து வருகிறது. மேலும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங் கள் தேர்தல் அறிக்கையில் பல திட்டங்கள் அறிவித் தும் வருகின்றன.

இந்த நிலையில் அஞ்செலி மற்றும் நவ்சாரி என்ற சட்டமன்றத் தொகு திகளுக்குட்பட்ட 18 கிரா மங்களைச் சேர்ந்த மக் கள் குஜராத் தேர்தலைப் புறக்கணித்து, அரசியல் கட்சித் தலைவர்கள் உள் ளிட்ட தேர்தல் சம்மந்த பட்ட விஷயங்களை தங் கள் கிராமங்களுக்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அவர்களுக்கு எதிராக சுவரொட்டி களை ஒட்டி வருக்கின்ற னர். இந்த கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க தங்கள் காரணங்களையும் சுவரொட்டிகள் மூலம் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு தொடர்பாக கிராம மக்கள் கூறுகை யில், "கரோனா காலகட் டத்திற்கு முன்பு வரை எங்கள் பகுதியான அஞ்செலியில் ரயில்கள் நின்று செல்லும். ஆனால் கரோனா ஊரடங்குக்குப் பிறகு எந்தவொரு இரயில்களும் நிறுத்தப்படுவ தில்லை.

இதனால் ரயிலில் செல்பவர்கள் தனியார் வாகனத்தில் செல்ல நேரிடுகிறது. அதற்காக நாளொன்றுக்கு அவர்கள் குறைந்தது 300 ரூபாய் செலுத்தி செல்ல வேண்டியதுள்ளது. இரயில் நிற்க வேண்டும் என்று நாங்களும் பல முறை மனு அளித்துள் ளோம். ஆனால் அந்த மனுக்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் இது வரை எடுக்கவில்லை.

இதனால் இந்த முறை நாங்கள் தேர்தலில் ஓட்டு போடுவது இல்லை என்று முடிவு செய்திருக்கி றோம். இந்த முடிவை ஒட்டுமொத்த 18 கிராம மக்கள் நாங்கள் அனைவ ரும் சேர்ந்து ஒருமனதாக இந்த ஆண்டு குஜராத் தேர்தலை புறக்கணிப்ப தாக முடி வெடுத்திருக்கி றோம்" என்றனர்.

மேலும் அவர்கள் ஒட் டியுள்ள சுவரொட்டியில் "ரயில் இல்லை என்றால், ஓட்டில்லை.." என்று எழு தியிருந்தது. இது தற் போது குஜராத் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

No comments:

Post a Comment