இமாச்சலப் பிரதேசம்: தேர்தல் முடிந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு கருவிகளை பா.ஜ.க. பிரமுகரின் காரில் எடுத்து சென்ற அதிகாரிகள் பணி இடை நீக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 15, 2022

இமாச்சலப் பிரதேசம்: தேர்தல் முடிந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு கருவிகளை பா.ஜ.க. பிரமுகரின் காரில் எடுத்து சென்ற அதிகாரிகள் பணி இடை நீக்கம்

சிம்லா, நவ. 15- இமாச்சலப் பிரதேசத் தில், சட்டசபை தேர்தல் அமைதி யான முறையில் நடந்தது. இந் நிலையில் ஓட்டுப்பதிவு எந்திரங் களை விதிமுறைகளை மீறி தனியார் காரில் எடுத்து சென்ற அதிகாரிகள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இமாச்சலப் பிரதேச மாநிலத் தில் 68 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு நவ.,12  வாக்குப் பதிவு நடந்தது. தேர்தல் விதி முறைகளின்படி, ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பதிவு எந் திரங்களை வாக்குச்சாவடியில் இருந்து ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மய்யங்கள் வரை அரசு வாகனங்களில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும்.

இந்நிலையில் 66 ராம்பூர் சட்டசபை தொகுதியில் உள்ள துத்நகர் 49க்கு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தவு டன், ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. அதன் பின், ஒரு தனியார் காரில் மின் னணு வாக்குப்பதிவு கருவிகள் அங்கிருந்து கொண்டு செல்லப் பட்டன.

இது குறித்து துத்நகர் வாக் குச்சாவடி அதிகாரிகள் கூறுகை யில், 'ஓட்டுப்பதிவு கருவிகளை கொண்டு செல்ல வாக்குச் சாவடியில் இருந்த அலுவலர்கள் அவசரம் காட்டினர். இதன் காரணமாகவே தனியார் காரில் ஓட்டுப்பதிவு எந்திரங்களை கொண்டு சென்றனர்' என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாக காங் கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியதால், தேர்தல் ஆணை யம், வாக்குச்சாவடி உறுப்பினர் களை பணி இடை நீக்கம் செய் தது. மேலும், ஆறு வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாக்குப் பதிவு கருவிகள் கொண்டு செல்லப்பட்ட கார் பாஜக பிரமுகர் ஒருவர் கார் என்று தெரிந்தும் அவரது காரில் ஏன் வாக்குப்பதிவு கருவிகளை எடுத்துச்சென்றீர்கள் என்று காங்கிரஸ் பிரமுகர் கேள்வி எழுப்பினார். மேலும் அந்த வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கடந்த ஆண்டு உத்தரப் பிர தேச தேர்தலின் போது இதே போன்று தனியார் வாகனங்க ளிலும் குப்பை வண்டிகளிலும் வாக்குப்பதிவு கருவிகள் கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment