வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 11, 2022

வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, நவ 11- மதுரை யில் பட்டாசு தொழிற் சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந் தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், அவர்களின் குடும் பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற் சாலையில் 10.11.2022 அன்று திடீரென ஏற் பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந் தேன். செய்தி அறிந்தவு டன் வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியை மீட்பு பணிகளை துரிதப் படுத்த உடனடியாக சம் பவ இடத்திற்கு செல்ல அறிவுறுத்தியுள்ளேன். 

மேலும் இந்த விபத் தில் காயம் அடைந்தவர்க ளுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க வும் உத்தரவிட்டுள்ளேன். இச்சம்பவத்தில் உயிரிழந் தவர்களின் குடும்பத்தின ருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல் களையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந் தவர்களின் குடும்பத்தின ருக்கு தலா ரூ.5 லட்சம் முத லமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க வும் உத் தரவிட்டுள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment