செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 11, 2022

செய்திச் சுருக்கம்

வெளியீடு

துணை மாவட்ட ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவிகளுக்கான குரூப்-1, 92 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு வருகிற 19ஆம் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்கான அனுமதி சீட்டு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு.

நடக்கவில்லை

தமிழ்நாடு - கேரள மாநில பொது எல்லையில் எந்த விதமான டிஜிட்டல் நில அளவைப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

உத்தரவு

பணி வரன் முறை செய்யப்படாத பணியாளர் களுக்கு பணிப் பலன்களை வழங்க வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் உத்தரவு.

எதிர்கொள்ள

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பெய்யும் கன மழையை திறமையாக மாவட்ட ஆட்சியர்கள் எதிர்கொள்ள வேண்டும் என வருவாய் நிர்வாகம் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் அறிவிப்பு.

கட்டுப்பாடு

நாட்டின் நலன் சார்ந்த செய்திகளுக்காக அனைத்து தெலைக்காட்சி அலைவரிசை களும் நாள்தோறும் அரை மணி நேரம் ஒதுக்க வேண்டும் என புதிய கட்டுப் பாட்டை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.

அணு உலை

கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்புக்கு இதுவரை எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி உத்தரவு.

அதிகரிப்பு

இந்தியாவின் அதிக எடை கொண்ட எல்விஎம்-3 ராக்கெட், கூடுதலாக 450 கிலோவை சுமந்து செல்லும் வகையில் கிரையோஜனிக் என்ஜினின் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு

நாட்டில் சோலார் பயன்பாடு அதிகரிப்பால், 6 மாதத்தில் ரூ.35,000 கோடி எரிபொருள் சேமிக்கப் பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல்.


No comments:

Post a Comment