அறிவியல் : யானை அளவு எடை கொண்ட ராக்கெட் ஏவல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 19, 2022

அறிவியல் : யானை அளவு எடை கொண்ட ராக்கெட் ஏவல்!

பெங்களூரு அக். 19  இஸ்ரோ வரலாற் றில் முதல் முறையாக யானை யின் எடை கொண்ட ராக்கெட்டை வருகிற 23ஆம் தேதி அதிகாலை விண்ணில் ஏவுவதற்கான பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய விண்வெளி ஆய்வு மய் யத்தின் (இஸ்ரோ) மிகப் பெரிய ராக்கெட்டான ‘எல்வி எம் 3’ முதன் முறையாக வணிகச் சேவையில் கால் பதிக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த ‘ஒன் வெப்’ நிறு வனம் இணையப் பயன் பாட்டுக்கான செயற் கைக் கோள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந் நிறுவனம் தற்போது அரசு, கல்வி, வர்த்தகம் தொடர்பான பயன்பாட் டுக்காக 36 செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்புகிறது.

அந்த செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் பணி இஸ்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள் ளது. இந்நிலையில், இந்த 36 செயற்கைக்கோள்கள் வரும் 23-ஆம் தேதி சிறீஅரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ஏவு தளத்திலிருந்து ‘எல்வி எம் 3' ராக்கெட் மூலம் இரவு 12.07 மணிக்கு விண்ணில் ஏவப்பட வுள் ளன.

ஜிஎஸ்எல்வி எம்கே 3

‘ஜிஎஸ்எல்வி எம்கே 3’ என்று அழைக்கப்பட்டு வந்த ராக்கெட்தான் தற் போது ‘எல்விஎம் 3’ என்று அழைக்கப்படு கிறது. இது43.5 மீட்டர் நீளமும் 640 டன் எடை யும் கொண் டது. இந்த ராக்கெட் இதுவரையில் அரசு செயல்பாடுகளுக் காக மட்டுமே பயன் படுத்தப்பட்டு வந்தது. இந்நி லையில், தற்போது முதன்முறையாக வணி கச் செயல்பாடுகளுக்காக பயன் படுத்தப்பட உள் ளது.

இதுகுறித்து இஸ்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “நியூஸ் பேஸ் இந்தியா நிறுவனம் மற்றும் பிரிட்டனின் ஒன்வெப் நிறுவனம் இடையில் மேற் கொள் ளப்பட்ட புரிந் துணர்வு ஒப்பந்தங்களின் அடிப் படையில் ஒன்வெப் நிறுவனத்தின் செயற் கைக்கோள் களை ‘எல்வி எம் 3’ விண்ணில் ஏவுகி றது. இந்த ஒப்பந்தம் ஒரு வரலாற்று மைல்கல் ஆகும். இந்த ஒப்பந்தத் தின் வழியே ‘எல்விஎம் 3’ பன்னாட்டு வணிகச் சேவை சந்தையில் நுழை கிறது” என்று தெரிவித்து உள்ளது. ஏர்டெல் நிறு வனம் ஒன்வெப் நிறு வனத்தில் பெரும் முதலீடு மேற் கொண்டு, அந்நிறு வனத்தின் முக்கிய பங்கு தாரராக உள்ளது என் பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment