புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 19, 2022

புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு

புதுச்சேரி, அக்.19 புதுவையில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குறைவதும், கூடுவது மாக இருந்த நிலையில் நேற்று (19.10.2022) காய்ச்சல் பாதிப்பு கிட்டத்தட்ட இரு மடங்காகியுள்ளது. அரசு மருத்துவ மனைகளில் நேற்று முன்தினம்  (18.10.2022) 243 சிறுவர்கள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று 422 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 21 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 104 பேர் உள்நோயாளிகளாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய தினம் புதிதாக யாருக்கும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப் படவில்லை. இதன்மூலம் யாருமே இந்த பாதிப்புக்குட்பட்டவர்கள் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது


No comments:

Post a Comment