தொழில்நுட்பக் கோளாறால் முடங்கிய 'வாட்ஸ் - அப்' சேவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 26, 2022

தொழில்நுட்பக் கோளாறால் முடங்கிய 'வாட்ஸ் - அப்' சேவை

சென்னை,அக்.26- 'வாட்ஸ்அப்' மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரை யில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தக வல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

உலக அளவில் 'வாட்ஸ்அப்' மெசேஞ்சர் சேவை நேற்று (25.10.2022) பிற்பகலில் முடங்கி யது. வாட்ஸ்அப் மெசேஞ்சரை பயன்படுத்தி பயனர்களால் தகவல் பரிமாற முடியாமல் தவித்தனர்.  இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ்-அப் சேவை முடங்கி யதால் பயனாளர்கள் தவித்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர் களால் தற்போது செய்திகளை அனுப்பவோ பெறவோ முடிய வில்லை.சுமார் 50 நிமிடங் களுக்கும் மேலாக வாட்ஸ் அப் சேவை முடங்கி உள்ளது. உலகம் முழுவதும் 200 கோடிக்கு அதிகமான வாட்ஸ்ஆப் பயனா ளர்களை கொண்டுள்ளது.  தொழில் நுட்ப கோளாறு கார ணமாக வாட்ஸ் அப் சேவை நேற்று 12 மணி முதல் 2 மணி நேரமாக முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில்  அதிகாரப் பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்பட வில்லை என்று தெரிவித்தனர்.

சென்னை, டில்லி, மும்பை, லக்னோ உள் ளிட்ட பல்வேறு நகரங்களிலும் வாட்ஸ்-ஆப் சேவை முடங்கியது. வாட்ஸ்அப் மற்றும் அதன் தாய் நிறுவன மான மெட்டா தரப்பில் விரைவில் வாட்ஸ் அப் கோளாறு சரிசெய்யப்படும் என்று உறுதியளித்தது. பெரும் பாலான பயனர்களால் வாட்ஸ் அப் சேவையை முற்றி லுமாக பயன்படுத்த முடியவில்லை. இது மொபைல் மற்றும் வாட்ஸ் வெப் என அனைத் துக்கும் பொருந்தும். பின்பு விரைவில் இந்த தொழில்நுட்ப சிக்கலை வாட்ஸ்அப் தளம் சீர் செய்யப் பட்டது. 

இன்றைய டிஜிட்டல் உலகில் வாட்ஸ்அப் தளத்தின் பணி மிகவும் முக்கியமானது. அலுவலகம், பள்ளி, கல்லூரி மற்றும் தனிப்பட்ட ரீதியாக பலரும் எளிய வழியில் தொடர்பு கொள்ள உதவுகிறது இந்த தளம். இதன் சேவை முடங்கியது.  உலகமே முடங்கியதை போல இருந்தது. ஒருவருக்கு ஒருவர் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை, டில்லி, மும்பை, லக்னோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் வாட்ஸ்-ஆப் சேவை முடங்கியது. இந்நிலை யில் தொழில்நுட்ப கோளாறால் பகல் 12 மணி முதல் 2 மணி நேரமாக முடங்கிய வாட்ஸ் - ஆப் சேவை சீராகியுள்ளது. இந் தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ்-அப் சேவை சீரானது. 


No comments:

Post a Comment