குஜராத்தில் முஸ்லிம் இளைஞர்களை கட்டி வைத்து அடித்த காவல்துறை மனித உரிமை ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் புகார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 9, 2022

குஜராத்தில் முஸ்லிம் இளைஞர்களை கட்டி வைத்து அடித்த காவல்துறை மனித உரிமை ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் புகார்

காந்திகர்,அக்.9- குஜராத் மாநிலத்தில் இஸ்லாமியர்களை பொதுவெளியில் கட்டி வைத்து, பிரம்படி கொடுத்த காவல்துறையினருக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. இந்தப் புகார் தொடர்பான தகவலை, அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் உள்ள உந்தேலா கிராமத்தில் அண்மையில் நடந்திருந் தது. அந்தப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கற்களை வீசியதாக சொல்லி சில இஸ்லாமிய இளைஞர் களை காவல்துறையினர் மின்சார கம்பத்தில் கட்டி வைத்து, லத்தியை கொண்டு பிரம்படி கொடுத்துள்ளனர். அந்த காட்சிப்பதிவு சமூக வலை தளத்தில் பரவி இருந்தது குறிப்பிடத் தக்கது.

“குஜராத் மாநிலத்தில் இஸ்லாமியர் களை ஈவு இரக்கமின்றி காவல்துறையினர் தாக்கிய விவகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் போனது அந்த ஆணையத்துக்கு வெட்கக்கேடு. அதே நேரத்தில் யாரும் இந்த விவகாரம் தொடர்பாக புகார் கொடுக்கவில்லை என ஆணையத்தால் காரணம் ஏதும் சொல்ல முடியாது. ஏனெனில், திரி ணாமுல் சார்பில் புகார் கொடுக்கப்பட் டுள்ளது” என தனது ட்வீட்டில் அவர் தெரிவித்துள்ளார்.

அதோடு புகார் கொடுக்கப் பட்டதற்கான சான்றையும் அவர் பகிர்ந்துள்ளார். கற்களை வீசியவர் களுக்கு வழக்கப்பட்ட தண்டனை இது என காவல்துறையினர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. காவல் துறை இந்த விவாகரத்தில் நீதி பதியாக நின்று தண்டனை கொடுத் துள்ளது. அவர்கள் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது நடந்துள்ளது. அதனால், இதற்கு அர சியல் ரீதியிலான தூண்டுதல் கூட இருக்கலாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment