தமிழ் இலக்கியங்களும் ஆரிய ஆதிக்கமும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 9, 2022

தமிழ் இலக்கியங்களும் ஆரிய ஆதிக்கமும்

  • பகுத்தறிவுக்கேற்ற, பார்ப்பனீயத்தை வலியுறுத்தாத தமிழ் நூல் ஒன்றேனும் உண்டா?
  • கண்ணகி தமிழ்ப்பெண்ணா? பத்தினி தானா? றீ தமிழ் அரசர்கள் ஆரிய அடிமைகளே



 தந்தை பெரியார்

மூடநம்பிக்கை , ஆரியர் பிரச்சாரம், தமிழரின் இழிவு ஆகியவை ஒழிய, இராமாயணம் பெரிய புராணம் ஆகியவைபற்றிய வெறுப்புப் பிரசாரம் நாம் செய்ய ஆரம்பித்தவுடன், புராண வெறியர்களும் மத வெறியர் களுமான பண்டிதர்கள் அவற்றிற்குச் சிறிதும் இளைக் காததான காவியப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார் கள். காரணம் இலக்கியங்களில் முக்கியமான, சிலப்பதிகாரத் துக்கும், இராமாயணம், பார தம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம் ஆகிய மூட நம்பிக்கையும், ஒழுக்க ஈனமும், ஆபாசமும் கொண்ட கதைகளுக்கும், தமிழ் இலக்கியம், காவியம் என்று சொல்லப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன வாதிய கதைகளுக்கும், பெரியதொரு வித்தியாசம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை . 

பார்ப்பனீயத்தை வலியுறுத்தாத நூல் ஒன்றுண்டா?

பகுத்தறிவுக்கு ஏற்றவைகளோ, பார்ப்பனீயத்தை வலியுறுத்தாதவைகளையோ கண்டுபிடிப்பது கஷ்ட மாகவே  இருந்து வருகிறது.

இராமாயணத்தில் அனுமார் இலங்கையை எரித்ததற்கும், சிலப்பதிகாரத்தில் மதுரையைக் கண்ணகி எரித்ததற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பது விளங்கவில்லை! இலங்கையை அனுமார் எரித்ததில் அயோக்கியத்தனம் மாத்திரம் உண்டு. கண்ணகி மது ரையை எரித்ததில் அயோக்கியத்தனம், முட்டாள்தனம், மூடநம்பிக்கை, பார்ப் பனீயம் ஆகிய பல ஆபாசங்கள் இருக்கின்றன. 

இதுவா தமிழர் இலக்கியம்?

அரசன் செய்த அநீதிக்காக மதுரை மக்கள் ஏன் எரிபட வேண்டும்? மற்றும் அதில் பார்ப்பனர் தவிர மற்றவர்கள் எரிய வேண்டும் என்பதில் என்ன தமி ழர் மானம் அல்லது பழந்தமிழர் யோக்கியதை இருக்கிறது. ஒரு தட்டான் செய்த அக்கிரமத்திற்கு ஆயிரம் தட்டரர் (பொற்கொல்லர்)களைக் கொன்று பல பசுக்களைக் கொன்று - யாகமும் செய்து அந்த அநீதி நீக்கப்பட் டது என்றால் இதுதானா பழந்தமிழர் நிலைநாட்டும் இலக்கியம்? இதுதானா நீதி கற்பிக்கும் காவியம்? என்று கேட்கின்றோம். 

கண்ணகி தமிழ்ப் பெண்ணா?பத்தினியா? 

கண்ணகி - 'ஒரு தமிழ்ப் பெண்ணா அல்லது ஆரியர் சொல்லும் பிசாசா என்பது யோசிக்கத்தக்கதாகும். புருஷன் தேவடியாள் வீட்டிற்குப் போனால் கண்ணகி எதற்காக அதற்குப் பணம், நகை முதலியவை கொடுத்து ஆதரிப்பது என்று கேட்கிறேன். இப்பெண் கூடா ஒழுக்கத்துக்கும் விபசாரித்தனத்துக்கும் துணைபோன வளாகின்றாளா இல்லையா?

இப்படிப்பட்டவளைப் பத்தினிப் பெண் என்று கூறுவதானால் ஆரியரின் கொள்கைக்கும், தமிழர் கொள்கைக்கும் வித்தியாசம் என்ன என்பது நமக்கு விளங்கவில்லை. சிலப்பதிகாரம் அராபியன் நைட்ஸ் கதையாயிருந்தால் நமக்குக் கவலையில்லை . அது தமிழர் களுக்கு ஒரு தெய்வக் கதையாக இருப்பதுடன் இன்றும் கண்ணகியம்மன் கோவில்கள் ஏராளமாக இருப்பதுடன் புதிதாகவும் கட்டப்படுகின்றன.

கற்புக்கு உதாரணமாகவும், கண்ணகியின் நடத்தைகள் எடுத் துக் காட்டப்படுகின்றன. என வே பெண்கள் இழிவுக்கு இது பெரிதும் பயன்படுகின்றதா இல்லையா என்று கேட்கின்றோம். 

ஆண் விபசாரத்திற்கு வழிகாட் டுவதே கலையும் காவியமும்

அய்ரோப்பிய நாட்டில் விபசாரம் குற்றமாகக் கருதப்படுகிறது. அங்கு விபசாரத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே தன்மைதான். ஆனால், இந்தியாவில் மாத்திரம்தான் ஆண்களின் விபசாரம் பெருமையாக மதிக்கப்படுகின்றது. இதற்குக் காரணம் தமிழ் இலக்கியங்களும், காவியங்களும், ஆரியப்  புராண இதிகாசம், தர்ம சாஸ்திரங்களுமேயாகும். ஆரிய ஆதாரங்களைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. ஏனெனில் - தமிழர்களில் சிலராவது அவை தங்களுக்குச் சம்பந்தப்பட்டவை அல்ல என்கிறார்கள். ஆனால், தமிழ்க்காவியங்களைத் தங்களுடையவை என்பதோடு தங்களுடைய பழைய  பழக்க வழக்கங்களுக்கு இவற்றை ஆதாரமாய்க் கொள்ளுகிறார்கள்.

தமிழ்நாட்டில் பிறந்த அரசர்கள் கங்கையில் நீராடப்போவதெதற்கு? தங்கள் பெற்றோர்க ளைக் கங்கை நீராட்டம் செய்வ தெதற்கு! கல்நாட்டுக்கு இமய மலைக் கல்வேண்டும் என்பதும் அதைக் கங்கையில் குளிப்பாட்ட வேண்டும் என்பதும் எதற்கு? இந்தச் சிலப்பதிகாரத்துக்கும் கருட புராணத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என் பது விளங்கவில்லை. 

தமிழ் அரசர்கள் ஆரிய அடிமைகளா இல்லையா? 

இந்த அரசர்கள் ஆரிய அடிமை அரசர்களா? தமிழ் வேந்தர்களா! என்று இன்னும் வருபவைகளைக் கொண்டு சிந்தித்துப் பாருங்கள்.

1. செங்குட்டுவன் தந்தை நெடுஞ்சேரலாதன் போரில் இறந்த போது அவன் மனைவிமாரும் உடன்கட்டை ஏறினார் கள்.

2.  அந்தணர்களைக் காப்பாற்றி இருக்கிறார்கள்.

3. இந்திர விழா கொண் டாட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். இந்திரன் ஆரியர் கடவுளாவான்.

4. ஒவ்வொரு சம்பவத்திற்கும் ஊழ்வினை என்று முற்பிறப்பையும், முற்பிறப்பு வினையையும் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள்.

5. சகுனம் பார்த்திருக்கிறார்கள். 

6. கெட்ட சகுனத்திற்குச் சாந்தி செய்திருக்கிறார்கள். 

7. செத்துப்போனவன் மறுபடி உயிர்பிழைத் தெழுகிறான்.

8. முற்பிறப்பு மறுபிறப்பு ஆகியவற்றை ஒப்புக் கொள்ளுகி றார்கள்.

9. சாபத்தை நம்புகிறார் கள்.

10. ஒரு மனிதன் மற்றொரு மனிதனாகப் பிறப்பதை ஒப்புக் கொள்ளுகிறார்கள்.

11. விமானமேறி மேல் லோகம் செல்லுகிறார்கள்.

12. மந்திரங்களுக்குச் சக்தி கொடுக்கிறார்கள்.

13. காவலுக்கு ஒரு தெய்வம், ஆட்சிக்கு ஒரு தெய்வம் என்பன போன்ற பல தெய்வக் கொள்கையை நிலைநிறுத்துகிறார்கள்.

14. பாத்திரங்களுக்கு அற்புதச் சக்தியைப் புகட்டு கிறார்கள்.

15. மந்திரத்தால் வியாதியை நீக்குவது. 

16. வேறு உருவெடுப்பது. 

17. தெய்வம் நேரில் வந்து பேசுவது,

18. தேவர்கள் மேல் லோகத்தில் இருந்து வருவது.

19. கீழ்லோகத்தில் இருந்து மேல்லோகத்திற்குப் போய் வருவது

20. கங்கையில் புரோகித ருக்குக் கொடுப்பது. 

21. சோதிடம் பார்ப்பது.

22. முகூர்த்த நேரம் பார்ப்பது. 

23. சூலம் பார்ப்ப து. 

24. ஆரியர் கடவுள்களான பிறையணிந்த சிவன் மற்றும் புராண விஷ்ணு ஆகியவர்கனைப் பணிவது

25. நெருப்புவளர்த்து ஓமம் செய்வது.

26. ஆகாயத்தில் சஞ்சரிக் கும் முனிவர்கள், ரிஷிகள் ஆகிய வர்கள் வந்து அரசர்களைக் கண்டு போவது,

 27. தீ வளர்க்கும் பார்ப்ப னர்களை, வேதமோதுபவர் களைக் காப்பாற்றும்படி கட் டளை இடுவது.

28. பாவம் நீங்கத் தீர்த்த ஸ்நானம் செய்வது,

இப்படியாக இன்னும் பல காரியங்களைத் தமிழர் மன்னர்கள் நம்பினார்கள், செய்தரர்கள், பின்பற்றி னார்கள் என்பவைகள் பரக்கக் காண்கின்றன.

ஆரியக் கலப்பில்லாத தனித் - தமிழர் கொள்கை எது?

இவைகளைப் பற்றி இலக்கணம், இலக்கியப் பெருமை, கலைத்தன்மை அறியாத மக்களிடம் பேசு வதும், இந்தக் காவியங்களே பழந்தமிழர் நாகரிகங் களைக் குறிக்கின்றனவாகும் என்று சொல்லுவதும், இந்த வேந்தர்களே தமிழர் ஆட்சிக்கு ஆதாரமான வர்கள் என்பதும் எப்படிப் பயன்படுவதாகும் என்று கேட்கின்றோம்.

இவைகளைப் பார்க்கும் போது ஆரியர்கள் வருவதற்கு முன்பு திராவிட நாட்டிற்கு என்று ஆரியக் கொள்கை கலப்பில்லாத தனித்தமிழர் தன்மை என்பதாக எதையும் குறிப்பிடத் தக்க ஆதாரம் இல்லை என்று மரியாதையாக ஒப்புக் கொண்டு தமிழருக்கு என்று புதிதாக மதம், கலை இலக்கியம், இலக்கணம் முதலியவைகளை உண்டாக்கிக் கொள்ளுவதே நாணயமான காரியமாகும். அல்லது தோழர் பாரதியார் சொல்வது போல் பழந்திராவிடத்தில் ஆரியர் வரும்போது மனிதருமல்லாத, குரங்குகளுமல்லாத இடைப்பட்ட காட்டுமிராண்டி  ஜாதி ஒன்று இருந்தது. அதைத் தான் வால்மீகி குரங்கு என்றார்" என்பதை ஏற்று இப்போதைய தமிழர்களுக்கு அந்த இனத்தைத் தவிர - வேறு இனம் என்று சொல்வதற்கு தொல்காப்பியம், காவியம், இலக்கியம் ஆகிய காலத்திலும் ஆரியம் சம்பந்தப்படாத ஒரு தனி இனம் இருந்ததில்லை என்று ஒப்புக் கொள்ளுவது யோக்கியமான காரியமாகும்.

ஆரியர் - தமிழர் வேறுபாடு தான் என்ன ?

அப்படிக்கு இல்லா விட்டால் தமிழர் கொள்கை என்ன? அதற்கும் ஆரியக்கொள்கைக்கும் என்ன வித்தியாசம்? தமிழர் ஆட்சி எது? அதற்கும் ஆரிய ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? தமிழர் புராண இதிகாச இலக்கியம் எது? அதற்கும் ஆரி யர் புராண இதிகாச இலக்கியத்திற்கும் என்ன வித்தியாசம்?

தமிழரின் பகுத்தறிவு நம்பிக்கை என்ன? அதற்கும்' ஆரியர் பகுத்தறிவு நம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம்?

தமிழருக்கு எது கடவுள்? எத்தனை கடவுள்? அதற்கும் ஆரியர் கடவுளுக்கும் அவர்கள் கடவுள் எண்ணிக்கைக்கும் என்ன வித்தியாசம்!

தமிழர்கள் பெண்கள் நிலை என்ன? அதற்கும் ஆரியர்கள் பெண்கள் நிலைக்கும் என்ன வித்தியாசம்? என்பன வாதிய வைகளைத் தெளிவு படுத்த வேண்டும். 

தமிழர்களே கவனியுங்கள் 

அப்படிக்கில்லாமல் தமிழ்ப் பண்டிதர்களும், தமிழ்ப் பிரபுக் களும், தமிழ் அரசியல் தலைவர் களும் பார்ப்பனர்கள் எப்படித் தமிழர்களைச் சுரண்டப் பயன் படுத்திக் கொள்ளுகிறார்களோ அதே போல் தமிழர் சங்கம், தமிழ் இசைச் சங்கம், தமிழர் கலைச் சங்கம், தமிழர் சமயச் சங்கம் என்று பெயர் வைத்துக் கொண்டு வியாபாரம் துவக்கினால், இதைக் கண்டு தமிழ் மக்கள் ஏமாந்து போகும்படி விட்டு விடுவதா? என்று கேட்கின்றோம்.

இவர்கள் சங்கங்களில் எதிலாவது ஆரியர் கொள் கைகள் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டார்களா? என்று கேட்கின்றோம்.

வடமொழிக்குப் பதில் தமிழ் என்று மாத்திரம் சொன்னால் தமிழன் தற்கால இழிவிலிருந்து விடுதலை பெறுவானா? என்று கேட்கின்றோம்.

ஆரியர் புராணக் கடவுள் களைப் பற்றித்தான் தமிழ் இசைச்சங்கத்தில் தமிழில் பாட்டுகள் உண்டாக்கிப் பாடப் போகிறார்களே ஒழிய, தமிழருக்கு அவர்களது இழிவு நீங் கும்படி அவர்களை மற்றவர் கள் சுரண்டாமல் இருக்கும்படி ஏதாவது செய்யப் போவதாகத் தெரிகிறதா? என்று கேட்கிறோம். 

'விடுதலை' 30.6.1943 பக்கம் 3-4


No comments:

Post a Comment