ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 5, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பாரத் ராஷ்டிர சமிதி என்ற பெயரில் அகில  இந்திய கட்சியை தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் துவங்குகிறார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* உள்துறை, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு, வெளியுறவு, நிதி மற்றும் சுகாதாரம் ஆகிய 6 முக்கிய நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் பதவி அனைத்தும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடம் உள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாய்ப்பு பறிப்பு.

தி டெலிகிராப்:

* பிரதமர் மோடியின் உத்தரகாண்ட் பயணத்தில் பங்கு பெற நற்சான்றிதழ் காட்ட வேண்டுமென பத்திரிக் கையாளர்களுக்கு உத்தரவு. இதற்கு பிஜேபி மீது காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்ததால் எதிர்ப்புக்குப் பிறகு உத்தரவு திரும்பப் பெறப்பட்டது

* பீகார் உள்ளாட்சித் தேர்தலில் ஓபிசி ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. (இதே போன்று மகாராஷ்டி ராவிலும் ரத்து செய்த நீதிமன்றம், பாஜக கூட்டணி ஆட்சி வந்ததும் அனுமதி தந்தது நினைவு கூரத்தக்கது.)

* மூத்த கம்யூனிஸ்ட் மற்றும் சிபிஅய்-எம்எல் (ரெட் ஸ்டார்) இன் நிறுவனர் தேசிய பொதுச் செயலாளர் கே.என். ராமச்சந்திரன், எதிர்க்கட்சிகள் பாஜகவை மட்டும் தாக்குகின்றன. பாஜகவின் கருத்தியல் தாய் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் மனுவாதி இந்துத்துவ சித்தாந்தம் கடு மையாக எதிர்க்கப்பட வேண்டும் எனக் கூறினார்.

.- குடந்தை கருணா


No comments:

Post a Comment