மேனாள் அட்வகேட் ஜெனரல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 18, 2022

மேனாள் அட்வகேட் ஜெனரல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி இரங்கல்

தமிழ்நாடு பார் அசோசி யேசன் மேனாள் தலைவரும், பிரபல சட்ட நிபுணரும், மேனாள் அட்வகேட் ஜென் ரலுமான மூத்த வழக்குரைஞர் திரு. ஆர். கிருஷ்ணமூர்த்தி (வயது 92) அவர்கள் இன்று காலை (18.10.2022) இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.

சிறந்த, மூத்த வழக்குரைஞர் - என்பதையெல்லாம் தாண்டி அவர் எவருடனும் பண்புடனும், அன்புடனும் பழகும் உயர்ந்த பண்பாளர்.

முன்பு எம்.ஜி.ஆர். அரசு கொண்டு வந்த 9000 ரூபாய் வருமான வரம்புச் சட்டம் சரியானதல்ல  - என்று திராவிடர் கழகம் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் கழகத்தின் சார்பில் சிறப்பாக வாதாடிய - சமூக நீதியில் ஆழ்ந்த நம்பிக்கை உடைய மென்மையாளர்.

அவரது மறைவால் வருந்தி துன்புறும் அவருடைய குடும்பத்தினர் குறிப்பாக அவரது மகள் ராதா மற்றும்  உறவினர்கள், வழக்குரைஞர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு நமது ஆறுதலைக் கூறி  ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
18.10.2022


No comments:

Post a Comment