செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 16, 2022

செய்திச் சுருக்கம்

 ஒப்புதல்

நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில், நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதமும் ஒன்றாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கண்டனம்

ஆவினின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஆதாரமற்ற கருத்துகளை பரப்ப வேண்டாம் என பால் வளத் துறை அமைச்சர் நாசர் கடும் கண்டனம்.

காப்பீடு

வழக்குரைஞர்களுக்கான குழு காப்பீட்டு திட்டத்தின் அடுத்த ஆண்டுக்கான பயனை பெற வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் அறிவிப்பு.

ராஜினாமா

ஒன்றிய உள்துறை மூத்த பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்த விஜய் குமார் அய்.பி.எஸ். திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பறிப்பு

காரைக்கால் நடுக்கடலில் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் இரும்பு பைப்பால் தாக்கி வலைகள் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை கொள்ளையடித்து சென்றனர்.

பாதிப்பு

ஈரோடு அந்தியூரில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்ததால் பெரியார் நகர், அண்ணாமடுவில் 500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பாதிப்பு.

உயிரை...

கோத்தகிரியில் இருந்து கோவை மருத்துவ மனைக்கு 68 நிமிடத்தில் ஆம்புலன்சை ஒட்டி சிசுவின் உயிரை காப்பற்றிய ஓட்டுநர் அக்கீம்.

அபராதம்

சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் திட, திரவ கழிவு மேலாண்மையை சீராக மேற்கொள்ளத் தவறிய கருநாடகா, பிஜேபி அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.2,900 கோடி அபராதம் விதிப்பு.

குடும்ப அட்டை

தமிழ்நாட்டில் ஒன்றரை ஆண்டில், 13.50 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் (குடும்ப அட்டை) வழங்கப்பட்டள்ளன என உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்.

நோட்டீசு

இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய மனித உரிமை ஆணையம், கேரள அரசுக்கு ‘நோட்டீசு' அனுப்பியுள்ளது.


No comments:

Post a Comment