ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 16, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

ஆர்.எஸ்.எஸ். - பாஜகவின் சித்தாந்தங்கள் நாட்டை பிளவு படுத்துகிறது, பெல்லாரி நடைப்பயணத்தில் ராகுல் காந்தி பேச்சு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

சட்டத்தை கையாளும் போது பெண்ணிய சிந்தனையை இணைத்துக்கொள்ளுங்கள்: சட்ட பட்டதாரிகளுக்கு நீதிபதி சந்திரசூட் அறிவுரை

‘உண்மையான பிரச்சினைகளுக்கு பிரதமர் எப்போது தீர்வு காண்பார்?’: உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா 107ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது குறித்து மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி.

ஹிந்தியும் இந்துவும் இந்தியாவைச் சொந்தமாக்கி விடுமா? உஜ்ஜயினியில் இந்து மத நம்பிக்கையை பிரதமர் கொண்டாடும் போது, உள்துறை அமைச்சர் அமைதியாக ஹிந்தி மொழியைத் திணித்துக்கொண்டிருந்தார்... நான் ஒரு அசாமியாகவோ அல்லது மலையாளியாகவோ இருந்தால், நான் அரைகுறை குடிமகனாக உணர்கிறேன். நானும் ஒரு முஸ்லிமாகவோ அல்லது கிறிஸ்தவனாகவோ இருந்தால், நான் குடியுரிமை இல்லாதவன் என்று உணர் வேன் என ப.சிதம்பரம் தனது கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார்.

தி டெலிகிராப்:

காந்தியாரைக் கொன்றது யார் என்று பார்வையாளர் களிடம் நிதிஷ்குமார் கேட்டபோது, மக்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். என்று சொல்ல, இதை என்றும் மறந்து விடாதீர்கள் என பதிலுரைத்தார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

ஹிந்தி திணிப்பை கண்டித்து டில்லியில் போராட்டம் நடத்தப்படும் என சட்டமன்ற உறு:பபினர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை .

- குடந்தை கருணா


No comments:

Post a Comment