நூல்: திராவிட இயக்க நூல்கள் அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 1, 2022

நூல்: திராவிட இயக்க நூல்கள் அறிமுகம்

நூல் ஆசிரியர்: முனைவர் ப. கமலக்கண்ணன்

வெளியீடு: சுடர்மணி பதிப்பகம்

ஆண்டு: 2022, விலை: ரூ.200/-

பக்கங்கள்: 209

நூல்கள் என்பவை எண்ணங்களைப் பதிவு செய்து, கருத்துகளை எழுத்து வடிவில் காட்டும் ஒரு அறிவு சார்ந்த கருவிகளாகும்.

சமுதாயம் வளர்ச்சி பெற நூல் அறிவு தேவை. அந்த வகையில் “திராவிட இயக்கம்’’ குறித்து வரலாறும் வளர்ச்சியும் புரிதலும் நம்மிடையே உள்ளன. இவற்றையெல்லாம் மேலும் விரிவாகப் பதிவு செய்த நூல்கள் ஏராளம். அவற்றை எல்லாம் ஓர் இடத்தில் காண்பது அரிது. குறிப்பாக பல்வேறு நூல்களை வாசித்த பலருக்கு சில  நூல்களைப் பற்றி அறிமுகமே இல்லாமல் இருக்கும். இப்படி ஒரு நூல் உள்ளதா? என்று “திராவிட இயக்க நூல்கள் அறிமுகம்’’ என்னும் நூல் சிறப்பானதொரு அறிமுகத்தை ஏற்படுத்துகிறது. ஆய்வடங்கல் போல் இல்லாமல் நூல்களின் விவரமும் அதன் பொருண்மைகளின் அறிமுகமும் என ஒவ்வொரு நூலாகக் கொண்டு நூறு நூல்களைத் தொகுத்துத் தந்துள்ளார் நூல் ஆசிரியர்.

பேராசிரியர் ப. கமலக்கண்ணன் இயல்பிலேயே திராவிட இயக்கத் தாக்கம் உடையவராக விளங்குபவர். திராவிடர் இயக்கக் கொள்கையான சுயமரியாதையுடனும் பகுத்தறிவுடனும் உருவானவராய்த்  திகழ்கிறார்.

“திராவிடச் சாதி’’ என்னும் நூலில் தொடங்கி ‘பாரதிதாசன்’ வாழ்க்கை வரலாற்று நூலோடு 201 பக்கங்களில் முடிக்கிறார்.

ஒவ்வொரு நூலின் மூலக்கருத்தையும் எடுத்துக் கூறியிருப்பதால், இது போன்ற கருத்துகளைப் பார்த்துப் பார்த்து அந்த நூலினை வாங்கிட எல்லோருக்கும் பேருதவியாக அமைய நல்ல முயற்சி என்பதை இந்த நூலின் மூலம் அறியலாம்.

No comments:

Post a Comment