நூல் மதிப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 1, 2022

நூல் மதிப்புரை

வாழும் வரைக்கும் வள்ளுவம்

விடுதலை உணர்வை வீறுகொள்ளச் செய்த செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், வ.உ.சியின் பெயரில் அமைந்த கல் லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரி யர் ஜெகதீசன் அவர்களின் தித்திக்கும் தேன்கவி நூலே 'வாழும் வரைக்கும் வள்ளு வம்' படிப்பதற்கும் மேடைகளில் முழங்குவ தற்கும் எளிமையாய் இருக்கும். அறுசீர் விருத்தத்தில் அமுதாய் இருக்கும் எளிய சொல்லெடுத்து இன்பக் குறளின் மனம் மணக்க மணக்க கவிதையினை வரைந்து உள்ளார். உலகமெல்லாம் போற்றும் - பின் பற்ற நினைக்கும் இன, மத, ஜாதி, மொழிப் பாகுபாடு காட்டாத ஒரே நூல் திருக்குறளே. பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பல நாடுகளிலும் போற்றப்படும் நூல் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்த போதும் பல மொழிகளிலும் ஆய்வு நூல் களும், உரைநூல்களும், கவிதை நூல்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் அரிய நூல்.

உலகத்தை வாட்டி வதைத்த பெருந் தொற்று நோயாக இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் கரோனாவை ஒப்பிட்டு மக்கள் வாழ்வியலோடு பொருந்தும் வகையில் இந்நூலை உருவாக்கியிருக்கிறார் பேராசிரியர் ஜெகதீசன். பாராட்டுகிறோம். கொத்துக் கொத்தாகக் கரோனாவால் மக்கள் அழிந்த போதும் உலகம் முழுவது முள்ள மக்கள் தங்கள் பேராசைக் குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. உண்மையான உழைப்பை நம்புவதில்லை. பிறரை ஏய்த் துப் பிழைப்பவர்களும், கொள்ளையிடுபவர் களும், பிறர் உழைப்பைச் சுரண்டுபவர் களும் திருந்தவில்லை என்பதை எண்ணி உலகில் ஒரு பெரும் மாற்றத்தை வள்ளுவர் வழியில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் வழியில் கொண்டுசெல்லும் நோக்கில் கவிதை நூலைப் படைத்துள்ளார். வாழ்த்துகின்றோம்.

வள்ளுவத்தைப் போற்றி, தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞருக்குக் காணிக்கையாக்கி, ,இந்நூலை முதல் அலை, இரண்டாம் அலை என்று கரோனா அலை அலையாகப் பிரித்து மரபால் மாறாத மணக்கும் கவிதைகளாய் வடித்துள்ளார்.

‘வள்ளுவர் கோட்டம் கண்டு

வாழ்சிலை தென்மு னையில்

தெள்ளலைக் கரையில் வைத்துக்

திருக்குறள் உரைவ குத்து’               (பக்.7)

இந்நாட்டை ஆண்டு வந்ததால் கலைஞ ருக்குக் காணிக்கையாக்கியது சிறப்பானதே!

அறுசீர் விருத்தம் அனைவருக்கும் வைத்திருக்கும் பெருவிருந்தாய் இங்கே நம் உள்ளத்தைக் கவருகிறது. வருத்தத்தைப் போக்கும் விருத்தத்தில் வள்ளுவரின் வாழ் வியலை வய்யத்திற்கு வழங்கியிருப்பது போற்றற்குரியது.

எல்லையில் லாப்பே ராசை

ஏவிடச் சென்று கண்ட

பல்வகை யெல்லாம் நோயால்

பதுங்கியே படுத்த தன்றோ?              (பக்.15)

கோவிலை அடைத்தே விட்டார்

கூடியே போதற் கில்லை!

தேவையை அடைவ தற்கும்

திசையெலாம் அடைப்பே எல்லை!        

(பக்.17)

என்றும்

கூறி முதல் அலை நோயின் தன்மையைக் கூறுகின்றார்.

தொட்டாலே தீட்டென் றேதான்

தொனியிடும் வேதம் காதில்

பட்டாலும் தீட்டென் றேதான்

பார்த்தாலும் தீட்டென் றேதான்...     (பக்.21)

- என்றுரைத்து,

பிறப்பொக்கும் அனைத்து யிர்க்கும்

பெருமையை வள்ளு வர்தாம்

சிறப்பொக்கச் சொன்னார்! 

மேலும்...

இறப்பென்ப தில்லை யென்றே

செப்பவும் கிருமி உண்டோ? 

என்று வினாவை எழுப்பி வள்ளுவரின் வழியில் மக்களைச் சிந்திக்கச் செய்கின்றார். பெருந்தொற்றாய் இருக்கும் ஜாதித் தொற்றை ஒழிக்க வழியாகிறது இந்நூல். இரண்டிலும் உள்ள தீமை களையப்பட வேண்டியதிலும் அதன் தேவை முக்கியா னது, அவசிய அவசரமானது என்பதும் இந் நூலில் அறியப்படும் முதன்மைக் கருத்து. உடனடித் தேவை மருந்தா, மாத்திரையா, ஊசியா என்று உலகமே கவலையுடன்  சிந்தித்துக்கொண்டிருக்கும் அதே அவசி யம் - தேவை ஜாதித் தொற்றுக்கும் வேண்டு மெனக் கூறும் இந்நூல் அனைவரும் படிக்க வேண்டும்.

ஜாதித் தொற்றைத் தொடர்ந்து பணத் தொற்று, பதவித் தொற்று, மதத் தொற்று, பாலியல் தொற்று எனப் பல்வகைத் தொற்று நோய்க்கும் மருந்து காண உலகம் முனைந் தாற்போல் முனைதல் வேண்டும் என்கிற ஆசிரியரின் உள்ளக்கிடக்கையை அறி யலாம்.

பச்சோந்தி தன்னைக் காக்கப்

பல்வண்ணம் மாற்றக் கூடும்!

முச்சந்தி மனிதன் ஏனோ

முடிவிலா நிறத்தில் வாழ்வான்

எச்சந்தில் உள்ளா ரையும்

இழுத்துநா விழுங்கிக் கொள்வான்...     

(பக்.25)

என்று, தொற்று நோயாக வாழும் பச்சோந்தி மனிதரைச் சாடுவது சிறப்பு.

வள்ளுவர் கண்ட ஊழோ

வருமுறைச் செலவென் றாகும்!

தள்ளவே முடியா தாகத்

தனித்தனிச் செல்ல வேண்டும்!         

(பக்.159)

என்றும், தொற்று நோயையும் தொற்று நோயாக இருக்கக்கூடிய சமூகப் புற்றையும் வள்ளுவக் கூற்றுடன் ஒப்பிட்டு எளிய நடையிலே எவரும் விரும்பும் வகையிலே கவிதையினைப் படைத்துள்ளார். பல் வகையான விருத்தங்கள் மரபிலக்கணத்தில் இருந்தபோதும் 593 பக்கங்களையும் அறு சீர் விருத்தம் என்ற அனைவரும் போற்றும் பாடல் வகையில் படைத்திருப்பது பாராட் டுக்குரியதே!

“மெத்த னத்தில் இருந்ததனால்

மேவும் அழிவே என்றிடிந்தே

பத்தாண் டாக ஆண்டவர்கள்

பரிந்து தந்த மானியத்தைத்

தத்தம் ஆக்கிக் கொண்டவர்கள்’’       

(பக்.590)

நிலையையும் சுட்டிக்காட்டிச் சிந்திக்க வைத்துள்ள பேரா. ஜெகதீசன் அவர்களை வாழ்த்துகிறோம்.

மதிப்புரை: வாசல் எழிலன்


No comments:

Post a Comment