சமூக ஏற்றத்தாழ்வுடன் வறுமை, பட்டினி, வேலையின்மை அதிகரிப்பு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி ஒப்புதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 3, 2022

சமூக ஏற்றத்தாழ்வுடன் வறுமை, பட்டினி, வேலையின்மை அதிகரிப்பு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி ஒப்புதல்

மும்பை, அக்.3- இந்தியாவில் சமூக ஏற்றத்தாழ்வுடன், வறுமை, பட்டினி வேலையின்மை அதிகரித்து வருவதாக ஒன்றிய அரசின் நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத் துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி வேதனை தெரிவித்துள்ளார். 

நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் ‘பாரத் விகாஸ் பரிஷத்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி பேசியதாவது, “இந்தியா வளமான  நாடாக இருந்தாலும், இங்குள்ள மக்கள் வறுமை, பட்டினி, வேலை யில்லா திண்டாட்டம், ஜாதிவெறி, தீண்டாமை மற்றும் பண வீக்கத்தை எதிர்கொள்கிறார்கள். இங்கே பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது, இந்த இடைவெளியைக் குறைக்க வேண்டும். நாட்டில் நகர்ப்புறங்களில் நிறைய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, ஆனால் கிராமப்புறங்களில் வசதி கள் மற்றும் வாய்ப்புகள் இல்லாத தால், அதிக மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர் கின்றனர். சமூக ஏற்றத் தாழ்வு போலவே பொருளாதார ஏற்றத் தாழ்வும் அதிகரித்துள்ளது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம், அய்ந்தாவது பெரிய பொருளாதாரம் என நாம்  கருதுகிறோம், ஆனால் இங்கு ஏற்றத்  தாழ்வுகள் அதிகம். எனவே, சமூ கத்தில் மாற்றத்தை ஏற்படுத்த சமூகப் பொறுப்பு மற்றும் சமூக உணர்வு டன் பல்வேறு துறைகளில் எவ்வாறு பணியாற்றுவது என்பதுதான் நம் முன் உள்ள மிகப்பெரிய சவால்.” என்று கட்காரி கூறியுள்ளார். 

இந்தியாவில், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் விலைவாசி கடு மையாக உயர்ந்து விட்டது. பண வீக்கம், வேலையில்லாத் திண்டாட் டம் நாட்டை மிக மோசமாக பாதித்துக் கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் மட்டுமே குற்றம் சாட்டி வந்தன.

இந்நிலையில், ஒன்றிய அரசின் மூத்த அமைச்சரான நிதின்  கட்காரியே, வறுமை, வேலையின்மை குறித்து பேசியது பாஜக வினரை அதிர்ச்சியடைச் செய்துள்ளது. மறுபுறத்தில், எதிர்க்கட்சியினர் கட்காரியின் இந்த பேச்சை சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மோடியின் மோசமான ஆட்சி நிர்வாகத்திற்கு இதை விடவும் சான்று தேவையில்லை என்று  அவர்கள் பிரச்சாரத்திலும் இறங்கியுள்ளனர். இதை யடுத்து, தனது பேச்சு குறித்து டிவிட்டரில் விளக்கம் அளித் துள்ள கட்காரி “நமது சமூகம் மற்றும் தேசம் தொடர்பான பிரச்சினைகள் குறித்த பிடிஅய்-யின் டிவீட் பற்றிய எனது அறிக்கையை நேர்மறையாக பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment