உயிர்களைக் கொன்று கொண்டாடுவதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

உயிர்களைக் கொன்று கொண்டாடுவதா?

- இ.பொ.பகுத்தறிவு

தீபாவளி கொண்டாடும் மக்களே, பண்டி கைகள் எதற்காக? யாருக்காக?? நாம் மகிழ்வாக இருக்கிறோம் மற்றவர்களை மகிழ் விக்கிறோம் என்று எண்ணி பட்டாசு வெடித் துக் கொண்டாடும் இந்தத் தீபாவளியை என்னால் கொண்டாட்டமாக பார்க்க முடிய வில்லை. கொண்டாடுவதை ரசிக்க முடிய வில்லை. மாறாக வருத்தமாக இருக்கிறது. கோவம் மட்டும் தான் வருகிறது. காற்றை மாசுபடுத்தி, நிலத்தை மாசுபடுத்தி, நீரை மாசுபடுத்தி அப்படி என்ன கொண்டாட்டம் தேவைப்படுகிறது?

சிக்கித் தவிக்கம் விலங்குகள்

நம்மோடு இவ்வுலகில் வாழ்ந்து கொண் டிருக்கும் பல்லாயிரம் உயிரினங்களை, நம் கொண்டாட்டம் என்ற பெயரில் சித்திரவதை செய்கிறோம் . வாயில்லா உயிரினங்களைக் கொன்று புதைக்கிறோம். மனிதர்களான நாம் புகை ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும், அதிக சத்தத்தை தாங்க முடியவில்லை என் றாலும் கைகளால் கண்களை, காதுகளை மூடிக்கொள்கிறோம். ஆனால் பாவம் இந்த நாய்க்குட்டிகள், பூனைகள், பறவைகள் எல்லாம் இந்த அறிவுள்ள  உள்ள மனித விலங் குகளிடம் சிக்கித் தவிக்கின்றன. சத்தத்தைக் கேட்டால் என்ன செய்வதென்று கூட தெரியாத உயிர்கள் அவை. ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு அடுத்த நாள் எத்தனை பறவைகள் இறந்து கிடப்பதைப் பார்க்கிறோம். ஏன் அவற்றை ஒரு உயிராக நாம் மதிப்பதில்லை? மனிதர்கள் உயிர் மட்டும் தான் இங்கு மதிக்கப்பட வேண்டுமா?

மூச்சுத் திணரும் மனித இனம்

விலங்குகளுக்கு பாவம் அறிவில்லை. என்னவென்றே தெரியாமல் பட்டாசின் ஒளி யிலும் ஒலியிலும் மாட்டிக்கொள்கின்றன.ஆனால், மனிதர்கள் ஆபத்து என்று தெரிந்தேதான் சுவாசிக்கும் காற்றில் விஷத் தைப் பரப்பிக்கொள்கிறார்கள் .குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர்கள், நோயாளிகள் இவர்கள் யாரும் கட்டாயம் சுவாசிக்கக் கூடாத அளவிற்கு காற்றை மாசுபடுத்தியும், கேட்கக்கூடாத அளவிற்கு சத்தத்தையும் கொண்டாட்டம் என்ற பெய ரில் பரிசாக அளித்துக்கொண்டிருக்கிறோம். தினமும் நாம் சுவாசிக்கும் வாகனங்கள், தொழிற்சாலைகள் வெளியிடும் மாசுக் காற் றைவிட இது மிகவும் ஆபத்தானது. ஒரு நாளில் என்னவாகப் போகிறது என்று சாதார ணமாக நினைக்க வேண்டாம். இந்த மாசின் விளைவு ஒரு நாளில் முடிவதல்ல. இதன் விளைவு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் . அந்த ஒரு நாள் நாம் பல்லாயிரம் உயிர்களைக் கொல்கிறோம் . நம் குழந்தைகளுக்கும், நம் நண்பர்களுக்கும் நம் குடும்பத்தினருக்கும் நாமே விஷத்தைச் சுவாசிக்க வைக்கிறோம் என்று நாமே உணர வேண்டும் . 

டெல்லியில் ஜனவரி மாதம் வரை சாதா ரண பட்டதாசிற்கு தடை, அரியானாவிலும் மேற்கு வங்காளத்திலும் பசுமைப் பட்டாசு கள் வெடிக்க மட்டுமே அனுமதி. டெல்லி மிகவும் ஆபத்தில் உள்ளதால் முதலில் தடை விதித்துள்ளனர். அந்த நிலை வரும் வரை நாம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாமே நமக்குள் ஒரு கட்டுப்பாடு விதித்துக் கொள்ள வேண்டும். பட்டாசு வாங்குவதைத் தவிர்க்கவேண்டும்.

பட்டாசு வெடிப்பது தொழிலாளர்களுக்கு உதவுவதா?

கடந்த ஆண்டு சாதாரண நாள்களை  விட 9 மடங்கு அதிகமாக காற்று மாசடைந் துள்ளது (334 AQI) . ஆரோக்கியமான காற்று என்றால் 0- 50 AQIதான் இருக்க வேண்டும். ஆனால், ஒரே நாளில் நாம் இதனைச் சுவா சிப்பது மிகவும் ஆபத்தானது. இந்த ஒரு நாளுக்காக பலரையும் பாதிப்புக்குள்ளாக்கிக் கொண்டாடும் இந்தக் கொண்டாட்டம் அனைவருக்கும் கொண்டாட்டமாக அமை வதில்லை. சிவகாசி பட்டாசு தொழிற்சாலை களில்  வேலைசெய்பவர்களின் நிலை மையை நினைத்துப் பார்த்ததுண்டா? உடனே, அவர்கள் வாழ்வாதாரம் என்ன ஆகும் , பட்டாசு தொழிற்சாலைகள் இல்லை என்றால் அவர்கள் நிலை என்னவாகும் என்ற கேள்வி தான் முதலில் வருகிறது. 

பட்டாசுகளில் ஆர்செனிக், லித்தியம், காட்மியம், கந்தகம், பாதரசம் போன்ற கன உலோகங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. ஒரு நாள் அதை நாம் தொட்டு பட்டாசு வெடித்தால் அது நச்சு என்று தெரிந்து வெடி வெடித்த பிறகு கைகளைக் கழுவுகிறோம்; முன்னெச்சரிக்கையுடன் வெடி வெடிக் கிறோம். ஆனால், தினமும் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் அதை தன் கைகளால் தொட்டு பட்டாசுகளை செய்யும் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் வேலை செய்யும் மக்களுக்கு எவ்வளவு ஆபத்தாக இருக்கும்?  முக்கியமாக பட்டாசு செய்யும் வேலை களில் ஈடுபடுவது குழந்தை களும், பெண்களும்தாம். சராசரியாக  ஆண்டிற்கு 30கும் மேலான உயிர்களை பட்டாசு தொழில் சாலையில் நாம் இழக் கிறோம். எப்போது வேண்டுமானாலும் விபத்து நடக்கலாம், எப்போது வேண்டுமா னாலும் இவர்கள் உயிர் இழக்கலாம். இது மட்டும் இல்லாமல் இங்கு வேலை செய்யும் அனைவருக்கும் நீண்ட கால உடல்நல பாதிப்புகளும் ஏற்படுகிறது. ஆனால், இவர்களைக் காரணம் காட்டி இவர்களின் வாழ்வாதாரத்திற்காக நாங்கள் பட்டாசை தடை செய்ய மட்டோம், பட்டாசு வெடித்து அவர்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கொண்டாட்டங்கள் அனைவருக்கும் வேண்டாமா?

முதலில் சொன்னது போல இது அனை வருக்குமான கொண்டாட்டம் இல்லை. நாம் வெடித்த பட்டாசின் குப்பைகளை யார் சுத்தம் செய்கிறார்கள்? நாம் செய்வது  இல்லை. கடந்த ஆண்டு சென்னையில் மட்டும் 18 மெட்ரிக் டன் நச்சுப்பட்டாசு கழிவுகள்  ஒரு சாராரின் கேளிக்கைக்காக விளிம்பு நிலை மனிதர்கள் குறிப்பாக ஒப்பந்தத் தொழிலா ளர்கள் நச்சுக் கழிவில் அமிழ்த் தப்படுகிறார்கள். இங்கு மக்கள் அதிகமாகப் பட்டாசு வெடிப் பதை வீரமாகவும், கவுரவமாக வும் நினைத்துக் கொண்டிருக் கிறார்கள். ஆனால், இந்த பட்டசுகள் வெடித்த தன் பின் உயிரியல், வேதியியல், சூழலியல் மற்றும் மிகப் பெரிய அரசியல் உள்ளது என்பதைப் புரிந்து கொண்டு, காசைக் கரியாக்காமல் நம்மைச் சுற்றியுள்ளவர்களில் நீண்ட கால ஆரோக்கியமான வாழ்விற்கான சூழலை ஏற்படுத்த முயல்வோம். கொண் டாட்டங்கள் அனைவருக்குமானதாக  இருக்க வேண்டும் என்பதை நினைவில்    கொள்வோம் !!! 

சுற்றுச் சூழல் நீதிக்கும் சமூக நீதிக்கும் எதிரான இந்தத் தீபாவளி தேவையா என்பதைச் சிந்தித்து செயல்படுவோம். 

No comments:

Post a Comment