பழங்குடி கலாச்சாரத்தை ஹிந்துக் கலாச்சாரமாக மாற்றுவதா? கேள்வி கேட்டவர்மீது வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 24, 2022

பழங்குடி கலாச்சாரத்தை ஹிந்துக் கலாச்சாரமாக மாற்றுவதா? கேள்வி கேட்டவர்மீது வழக்கு

பெங்களூரு, அக்.24 பழங்குடி இனக் கலாச்சாரத்தை ஹிந்து மதமாக மாற்ற முயற்சிக்கின்றனர் என்று கருத்து தெரிவித்த கன்னட நடிகர் மீது மத உணர்வை புண்படுத்தியதாகக் குற் றம்சாட்டி - கன்னட நடிகர் சேத்தன் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி யின் இயக்கத்தில் குடகு மலைவாழ் மக்களின் வழிபாட்டுக்கலாச் சாரத்தை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம் காந்தாரா. 

தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில்  காந்தாரா திரைப்படம் வெளியானது. 

 இந்தப் படத்தின் இயக்குனரான ரிஷப் ஷெட்டி பேட்டி ஒன்றில் கூறும்போது, 

படத்தில் இடம் பெற்ற குடகு மக்களின் வழிபாட்டு முறையான  பூட்டா கோலா ஹிந்து சனாதன கலாச்சாரத்தின் ஒரு பகுதி என கூறினார். 

ஆனால், கன்னட நடிகர் சேத்தன் குமார் என்ற சேத்தன் அகிம்சா கூறும்போது, பூட்டா கோலா ஹிந்து கலாச்சாரம் கிடையாது எனத் தனது டுவிட்டரில் பதிவிட்டார்.

 இதனைக் கண்டித்து பஜ்ரங்தள அமைப்பினர் குரல் கொடுத்தனர். மத உணர்வுகளைப் புண்படுத்தி விட்டார் என்றும் கூறினர். இதனை தொடர்ந்து  சேத்தனுக்கு எதிராக சேஷாத்ரிபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து, மக் களை தவறாக வழிநடத்துதல் என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment