தீட்சிதர்களின் ஜாதி ஆணவத்துக்கு முடிவு எப்போது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 13, 2022

தீட்சிதர்களின் ஜாதி ஆணவத்துக்கு முடிவு எப்போது?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபையில் ஏறி வழிபாடு செய்ய  அனுமதிக்க மறுப்பு - தீட்சிதர்களின்  தொடரும் அடாவடி

சிதம்பரம்,அக்.13- கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபையில் பக்தர்கள் வழிபாடு செய்யக்கூடாது என்று பக்தர்களைத் தடுத்து தீட்சிதர்கள் தொடர்ந்து அடாவடி செய்து வருகின்றனர்.

இவ்விவகாரத்தில் ஏற்கெனவே தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் உத்தரவு பிறப்பிக் கப்பட்டும், அதனை மீறுகின்ற தீட்சிதர்களின் அடா வடியும் தொடர்ந்தபடி உள்ளது.

கடவுள், மதம், வழிபாட்டிடங்கள் எனப்படுபவை அனைத்தும் அந்தந்த நம்பிக்கையாளர்களில் அனை வருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். ஆனால், வருணாசிரமம், ஜாதியின் பெயரால் பார்ப்பனர்களின் மேலாதிக்கம் கோயில்களில் தொடர்ந்து கொண்டிருக் கின்றன.

அதனை முறியடிக்கவே தமிழ்நாடு அரசு அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதை உறுதிப் படுத்திஉள்ளது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அற நிலையத்துறை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் ஜாதி வேறுபாடுகளைக் களைந்து பக்தர்கள் அனைவருக்கும் சம உரிமையை உறுதிப் படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக செயலாற்றி வருகிறது. கோயில்களில் தனி நபர்கள் கொள்ளை தடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், சிதம்பரம் நடராஜர் கோயிலிலோ தீட்சி தர்களின் கொட்டம் இன்னமும் அடக்கப்படவில்லை. அதன்காரணமாகவே, இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்த பின்னரும்கூட, பக்தர்களை கனக சபையில் ஏறி வழிபாடு செய்ய அனுமதி மறுக்கின்ற நிலை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

சட்டப்படி தீண்டாமை எந்த வடிவத்தில் இருந்தா லும் குற்றம் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தீட்சிதர் களின் அடாவடிகளும் தீண்டாமையின் வடிவமாகத் தானே தாண்டவமாடி வருகிறது.

தில்லையில் அம்பலத்தரசன் தாண்டவம் இருக் கிறதோ இல்லையோ, தீட்சிதர்களின் அடாவடிகள் தாண்டவமாடிக்கொண்டுதான் இருக்கிறது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய, கடந்த மே மாதம் 17ஆம் தேதி முதல் அனுமதி அளித்து இந்து அற நிலையத்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலை யில், பக்தர்கள் தொடர்ந்து கனகசபை மீது ஏறி வழிபாடு செய்து வந்த நிலையில், மேனாள் வங்கி மேலாளர் ஒருவருக்கு கனகசபை மேடை மீது ஏறி வழிபட அனுமதி மறுக்கப் பட்டதாக புகார் எழுந்தது. இதனை யடுத்து, கனகசபை தரிசனம் செய்வதில் எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு, அதனை கண்காணிக்க சிறப்பு அலுவலர்களை நியமனம் செய்து கடலூர் இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment