ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து இன்று (15.10.2022) காலை 10 மணியளவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். தி.மு.க. மாணவரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன் முன்னிலை வகித்தார். நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் தயாநிதிமாறன் மற்றும் தி.மு.க.வின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், இளைஞரணி மற்றும் மாணவரணி தோழர்கள் என பெரும் திரளானோர் பங்கேற்று ஹிந்தித் திணிப்பு, நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு, என்ற ஒன்றிய பா.ஜ.க. அரசின் அறிவிப்புகளைக் கண்டித்து ஒலி முழக்கங்களை எழுப்பினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment