காங்கிரஸ் உருவாக்கிய சொத்துக்கள் நரேந்திர மோடி தலைமையிலான அரசால் விற்கப்பட்டுள்ளன - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 11, 2022

காங்கிரஸ் உருவாக்கிய சொத்துக்கள் நரேந்திர மோடி தலைமையிலான அரசால் விற்கப்பட்டுள்ளன

மல்லிகார்ஜூன கார்கே

சிறிநகர், அக்.11 காங்கிரஸ் கட்சியின் உண்மையான போராட் டம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு எதிரானது என்று மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.  

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வருகிற 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர் தலில் தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசிதரூர்   ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்று பேசிய மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில்:- காங்கிரஸ் கட்சியின் உண்மை யான போராட்டம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு எதிரானது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நாட்டின் அரசியல், ஜனநாயக மற்றும் சமூக சூழலை பாதிக்கிறது. எதிர்க்கட்சிகளில் ஜனநாயகம் குறித்து கேள்வி எழுப்ப பாஜகவுக்கு உரிமை இல்லை. பாஜகவில் தலைவர் பதவிக்கான தேர்தல் எப்படி நடைபெறுகிறது என்பது யாருக்காவது தெரியுமா? அப்படியிருக்கும் போது நாட்டின் மிகப் பழைமையான மற்றும் மிகப்பெரிய ஜனநாயகக் கட்சியான காங்கிரஸைப் பற்றி கேள்வி எழுப்ப பா.ஜனதா கட்சிக்கு என்ன உரிமை இருக்கிறது? எழு பதாண்டுகளாக காங்கிர ஸால் கட்டமைக்கப் பட்ட ஜனநாயக அமைப்புகள் இப்போது பலவீனமடைந் துள்ளன. எதிர்ப்புக் குரல் இப்போது நசுக்கப்படுகிறது. பண்டித ஜவஹர்லால் நேரு முதல் மன்மோகன் சிங் அரசு வரை, காங்கிரஸ் கட்சி உருவாக்கிய சொத்துக்கள் நரேந்திர மோடி தலைமையிலான அரசால் விற்கப் பட்டுள்ளன. நாட்டில் அரசமைப்பு சட் டத்தையும் ஜனநாயக அமைப்புகளையும் பாதுகாப்பதில் காங்கிரஸ் கட்சி முன்னணியில் இருக்கிறது. நாட்டில் அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற காங்கிரஸ் கட்சியினர் முன்னின்று நடத்த வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment