தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சியின் பெருமிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 14, 2022

தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சியின் பெருமிதம்

சென்னை,அக்.14- தமிழ்நாட்டில் படிப்பறிவு பெற்றவர்கள் குறிப்பாக பெண்கள் எண்ணிக்கை அதிகரித் துள்ளதாக தமிழ்நாடு  குடும்ப நில வரங்களின் தொடர் கணக்கெடுப்புக்கு முந்தைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், மாநிலத்தின் பொருளியியல் - புள்ளியியல் துறை மற்றும் அமெரிக் காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உள்ள கணக்கெடுப்பு ஆராய்ச்சி மய்யம் ஆகியவற்றுடன் இணைந்து, தமிழ்நாட்டின் குடும்ப நிலவரங்களின் தொடர் கணக்கெடுப்பு அடிப்படை ஆய்வுக்கு முந்தைய ஆய்வை மேற் கொண்டது. இந்த ஆய்வு தொகுப்பை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.

மாநில அளவிலான இந்த கணக் கெடுப்பு கடந்த 2018 மார்ச் முதல் 2019 மார்ச் வரையிலானதாகும். இதில், அனைத்து வயது வரம்புகளிலும் உள்ள குடும்ப மற்றும் தனிநபர் அளவில் சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு மாவட்ட அளவிலான மதிப்பீடுகள், மாநில அளவிலான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 2.12 லட்சம் குடும்பங்களில் உள்ள 7.45 லட்சம் பேரிடம் இருந்து தரவுகள் பெறப்பட்டுள்ளன.

இந்த ஆய்வில், தமிழ்நாட்டில் 53 விழுக்காடு குடும்பங்கள் கிராமப் புறங்களிலும், 47 விழுக்காடு குடும் பங்கள் நகர்ப்புறங்களிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வி, வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் கல்வி கற்றோர் விழுக்காடு கடந்த 2011இல் 80.1 ஆகஇருந்த நிலையில் 2018-_2019இல் 85.4சதவீதமாக உயர்ந்துள்ளது. பெண் களின் கல்வியறிவு கிராமப்புறங்களில் 65.1-லிருந்து 73.7 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 82.3 -லிருந்து87.4 சத வீதமாகவும் உயர்ந்துள்ளது. குறிப்பாக கல்வி பெற்ற பெண்கள் விழுக்காடு 73.4 விழுக்காட்டில் இருந்து 80.2 சதவீதமாக 2011 மற்றும் 2018-_2019க்கு இடைப்பட்ட காலத்தில் உயர்ந்துள்ளது.

நில உரிமை

தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்களில் 19.4 விழுக்காடு பேர் விவசாய நிலங் களை வைத்துள்ளனர். முன்னதாக 2015-_2016இல் 18.6 விழுக்காடு நிலங்களை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், 91 விழுக்காடு பேர்ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீட்டுச் சொத்துகளை வைத்துள்ளனர். 89 விழுக்காடு பேர் கைபேசிவைத்துள்ளனர். கிராமப்புறங்களில் உள்ள குடும்பங் களில் 31 விழுக்காடு பேர் கைபேசிகள், இருசக்கர வாகனங்களை வைத்துள் ளனர். 28 சதவீத நகர்ப்புற குடும்பங்கள் குளிர்சாதனப்பெட்டி, இருசக்கர வாகனம், கைபேசி ஆகிய மூன் றையும் வைத்துள்ளனர்.

கிராமப்புறங்களில் 90.6 விழுக்காடு குடும்பங்களும், நகர்ப்புறங்களில் 57.8 விழுக்காடு குடும்பங்களும் சொந்த வீடுகளில் வசிக்கின்றன. வாடகை வீடுகள் நகர்ப்புறத்தில் 40.8 விழுக்காடு உள்ளது. கிராமப்புற குடும்பங்களில் 61 சதவீதமும், நகர்ப்புற குடும்பங்களில் 86 சதவீதமும் வீடுகளுக்குள் கழிப்பறை வசதிகளை பெற்றுள்ளன.

கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட சில வளர்ச்சிக்குறியீடுகளில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதே நேரம், 15 முதல் 24 வயதுக்குட்பட்ட மக்கள் தொகை 16 விழுக்காட்டில், 3 விழுக்காடு இளைஞர்கள் எந்த வேலையையும் நாடவில்லை என்பது தெரிகிறது. உயர்கல்வி, தொழிற் கல்வியை ஊக்குவிப்பது ஆகியவற்றில் சாதனை படைக்கும் நிலையில் இந்த பிரிவினர் மீது அக்கறை தேவை.

வேலைவாய்ப்பில் பெண்களின் எண்ணிக்கையை மேம்படுத்த வேண் டும். அதிக வேலைவாய்ப்பை உருவாக் கும் விவசாய மதிப்புக்கூட்டல் துறையை சரியாக உபயோகிக்க வேண்டும். சமூக வளர்ச்சியில் வீட்டு வசதி முக்கியப் பங்கு வகிப்பதால், வீடுகள் கட்டி முடிக்கவும், பழுது பார்க்கவும், தனிப்பட்ட வீட்டு கழிப்பறைகளை உபயோகிக்கவும், பாதுகாப்பான குடிநீர் போன்றவற்றுக்கு கொள்கை வகுப்பாளர்களால் நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ் வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.


No comments:

Post a Comment