கையாலாகாததுகள்!
* இந்தியாவில் ஸ்விக்கி, சோமேடோ போன்ற நிறுவனங்கள் 24 மணிநேரமும் வீட்டுக்கே வந்து உணவு கொடுக்கிறார்கள். அப்படியிருக்க, சிலர் பட்டினி கிடந்தால், அது அரசாங்கத்தின் தவறு அல்ல!
- ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி
>> இதற்குப் பெயர்தான் கையாலாகாத அரசாங்கம் என்பது.
பாசிசப் பாய்ச்சல்!
* எல்லை மீறும் அமைச்சர்களின் பதவி ரத்து.
- கேரள ஆளுநர்
>> ஒன்றிய பாசிச பி.ஜே.பி. ஆட்சியில் என்னதான் நடக்காது?
அண்ணா வழி?
* 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலும் வரலாம்.
- மேனாள் அமைச்சர் ஜெயக்குமார்
>> வாழ்க ‘அண்ணா நாமம்!'
சுற்றுலாவோ!
* தமிழ்நாட்டுக்கு 30 நாட்களில் 76 அமைச்சர்களை பிரதமர் மோடி அனுப்புகிறார்.
- அண்ணாமலை பேச்சு
>> சுற்றுலாப் பயணமோ!
நடக்கத்தான் முடியவில்லை
* டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது - இந்திய ரூபாயின் மதிப்பு சீராகவே இருக்கிறது.
- நிதியமைச்சர் நிர்மலா
>> பையன் உயரமாகத்தான் வளர்ந்துள்ளான் - நடக்கத்தான் முடியவில்லை!
No comments:
Post a Comment