செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 20, 2022

செய்திச் சுருக்கம்

உத்தரவு

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஅய்டி விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவை உயர்நீதிமன்றம் மாற்றிய மைத்து சம்பந் தப்பட்ட காவல்துறையினரே விசாரிக்கலாம் என உத்தரவு.

கழிப்பறை

அரசு அலுவலகங்களில் பொது மக்களுக்கான கழிப்பறை வசதிகளை உடனே ஏற்படுத்தித் தர வேண்டுமென அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தலை மைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு.

நடவடிக்கை

‘தீபாவளி' அன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடித்தால் அல்லது அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறி பட்டாசு வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு அறிவுரை.

மீட்பு

கொள்ளிடத்தில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கால் கிராமங்களில் தவித்த 5 ஆயிரம் பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

மூழ்கியது

அரியலூர் மாவட்டம் போடாலிகருப்பூர் 7 கண் மதகில் நேற்று உடைப்பு ஏற்பட்டதால் கோடாலிகருப்பூர் அன்னங் காரம்பேட்டை, கீழக்குடிகாடு உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

கிடையாது

லாபத்துக்காக செயல்படும் கல்வி நிறுவனங்கள், வருமான வரிச் சட்டப் பிரிவு 10 (23சி) கீழ் வரிச் சலுகை பெற முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

6 மாதம் சிறை

‘தீபாவளி'யன்று பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறைத் தண்டனையும் ரூ.200 அபராதமும் விதிக்கப்படும் என டில்லி அரசு எச்சரிக்கை.

ஒப்படைப்பு

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட சிலைகள் உள்பட ரூ.37 கோடி மதிப்பிலான 307 பழங்கால கலைப் பொருள்களை அமெரிக்க அதிகாரிகள் இந்தியா விடம் ஒப்படைத்தனர்.


No comments:

Post a Comment