தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு அமலில் உள்ளது கருநாடகாவில் இடஒதுக்கீடு அதிகரிக்க 9ஆவது அட்டவணை பாதுகாப்பு வேண்டும் : சித்தராமையா வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 23, 2022

தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு அமலில் உள்ளது கருநாடகாவில் இடஒதுக்கீடு அதிகரிக்க 9ஆவது அட்டவணை பாதுகாப்பு வேண்டும் : சித்தராமையா வலியுறுத்தல்

பெங்களூரு,அக்.23- தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு அமலில் உள் ளதைப் போன்று, கருநாடகாவில் இடஒதுக் கீடு அதிகரித்து 9ஆவது அட்டவணை பாதுகாப்பு செய்யப்பட வேண்டும் என்றும், கருநாடக மாநில சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை உடனே கூட்டி தீர்மானத்தை நிறை வேற்ற வேண்டும் என்றும் கருநாடக மாநில மேனாள் முதலமைச்சரும் கருநாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமாகிய சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

கருநாடக சட்டசபை எதிர்க்கட்சி தலை வர் சித்தராமையா பெங்களூருவில்   செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

ஓய்வுபெற்ற நீதிபதி நாகமோகன் தாஸ் அறிக்கையின்படி தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக் கான இடஒதுக் கீட்டை 18 விழுக்காட் டில் இருந்து 24 விழுக் காடாக அதிகரிக்க வேண்டும். உச்சநீதிமன்றம் 1992ஆம் ஆண்டு இந்திரா சஹானி வழக்கில், மொத்த இடஒதுக்கீடு 50 விழுக்காட்டை மீறக் கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வந் துள்ளது. இதனால் இடஒதுக்கீட்டு அளவு 60 விழுக் காடாக உயர்ந்துவிட்டது. இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதாக உள்ளது. தற்போது தாழ்த்தப்பட்ட பழங் குடியின மக் களுக்கு இடஒதுக்கீடு 6 விழுக்காடு அதிகரிக்கப்பட் டுள்ளது. இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதாக உள்ளது. இந்த இட ஒதுக்கீட்டு அதிகரிப் புக்கு சட்ட பாது காப்பு கிடைக்க வேண்டும் என்றால் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டும். அதை 9ஆவது அட்ட வணையில் சேர்க்க வேண்டும். 

பா.ஜனதா அரசு அமைந்து 27 மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டு, நாங்கள் வலியுறுத்திய பிறகு இடஒதுக் கீட்டுக்கு அவரச சட்டத்தை பிறப்பித்துள்ளது. சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும். 

இதற்கு முழு ஒத்துழைப்பை நாங்கள் வழங்குவோம். ஒன் றிய அரசு மீது அழுத்தம் ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.  தமிழ்நாட்டில் 69 விழுக் காடு இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இங்கும் அரசியல் சாசனத்தின் 9ஆவது அட்டவணை யில் அதனை சேர்க்க வேண்டும் என்று கூறினார்.


No comments:

Post a Comment