குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய தொழில்நிறுவனங்களில் ஆய்வு - 3 சிறுமிகள் மீட்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 11, 2022

குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய தொழில்நிறுவனங்களில் ஆய்வு - 3 சிறுமிகள் மீட்பு

சேலம், அக். 11- சேலம் மாவட்டத்தில் தனியார் தொழில் நிறுவனங்களில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய் தனர். அப்போது 3 சிறுமி கள் மீட்கப்பட்டனர். 

சேலம் மாவட்டத்தில் கடைகள், வணிக நிறு வனங்கள், மோட்டார் வாகனம் பழுது பார்க்கும் நிறுவனங்கள், நூற் பாலைகள், கோழிப்பண் ணைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணி யில் சேர்க்கப் பட்டுள் ளார்களா - என்பது குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள்  ஆய்வு செய்தனர். 

சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் ஆள் கடத் தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகா தார இயக்ககம், சைல்டு லைன் அமைப்பு, தொழி லாளர் நலத்துறை அலு வலர்கள் அடங்கிய குழு வினரால் பல்வேறு தனியார் தொழிற் நிறு வனங்களில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. ஆய்வின்போது சில நிறு வனங்களில் 3 சிறுமிகள் பணியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்ததால் அவர் களை அதிகாரிகள் மீட் டனர். பின்னர் அவர்கள் மாவட்ட குழந்தை நலக் குழுவிடம் ஒப்படைக்கப் பட்டனர். 

இதனையடுத்து சிறுமிகளை வேலைக்கு அமர்த்திய சம்பந்தப் பட்ட நிறுவனங்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 2 ஆண் டுகள் சிறை தண்டனை மேலும், 3 சிறுமிகளை பணிக்கு அமர்த்திய சம்பந்தப்பட்ட நிறுவனத் தின் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழி லாளர், குழந்தை தொழி லாளர் தடுத்தல் சட்டத் தின் கீழ் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள் ளது. குழந்தை தொழி லாளர் சட்டத்தின்படி 14 வயதுக்கு உட்பட்ட குழந் தைகள் மற்றும் அபாய கரமான தொழில்களில் 14 முதல் 18 வயதிற்கு உட்பட்ட வளரிளம் பரு வத்தினரை பணியில் அமர்த்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவ்வாறு பணியில் சேர்த்தது கண்டறியப் பட்டால் குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 வரை அபராதம் விதிக்கப்படும் என்று சேலம் தொழிலா ளர் உதவி ஆணையர் கிருஷ் ணவேணி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment