உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 26, 2022

உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தமிழ்நாடெங்கும் தந்தை பெரியார் அவர்களின் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

சோமரசன்பேட்டை

  கடந்த 17.9.2022 சனிக் கிழமை காலை 9.30 மணியள வில் மணிகண்டம் ஒன்றியம் சோமரசன்பேட்டையில் தந்தை பெரியார் அவர்களின் 144ஆவது பிறந்த நாள் அன்று மு.நற் குணம் தலைமையில் கழகத்தோழர்களுடன் சென்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்தனர். 

பிறகு, சோமரசன்பேட்டை யில் உள்ள பெரியார் சிலை அருகில் உள்ள பெரியார் பெருந்தொண்டர் டி.பி.முத்துசாமி நினைவுக் கல்வெட்டு கொடிமரத்தில் சங்கிலிமுத்து கழகக் கொடிஏற்றினார். 

    அல்லித்துறையில் உள்ள சடையவாத்தியார் நினைவு கல்வெட்டு கொடிமரத்தில் ப.கபிலன் கழகக்கொடியை ஏற்றினார். 

   சோமரசன்பேட்டை ஊராட்சி மன்றம் அருகில் உள்ள கொடி மரத்தில் கருப்பு கோகுல் கழகக் கொடியை ஏற்றினார். 

   நாடார் சத்திரத்தில் உள்ள சுந்தரம் நாடார் நினைவு கல்வெட்டு கொடிமரத்தில் ஜீ.சிவக்குமார் கழகக் கொடியை ஏற்றினார்.  

   வசந்த நகர் மு.நற்குணம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் படத்திற்கு கழகத் தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செய்தபின் அவர் வீட்டில் பிரவீன் குமார் கழகக் கொடியை ஏற்றினார். 

   கோணார் சத்திரத்தில் உள்ள கொடிமரத்தில் பெரியார் பிஞ்சு சே.கலைக் கண்ணன் கழகக் கொடி ஏற்றினார். 

    இரட்டை வாய்க்கால் முல்லை நகரில் திராவிட ராணி மகாலிங்கம் அவர்கள் வீட்டில் சு.ராஜசேகர் கழகக் கொடியை ஏற்றினார். 

   உய்யக்கொண்டான் திருமலை கொடாப்பு பேருந்து நிலையத்தில் உள்ள சட்ட எரிப்பு வீரர்கள் நினைவுக் கொடி மரத்தில் மு.நற்குணம் கழகக் கொடியை ஏற்றினார்.  

இனாம் குளத்தூரில் உள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. 

    கழகக் கொடி ஏற்றிய அனைத்து இடங்களிலும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    தந்தை பெரியார் சிலை கழகக் கொடி தோரணங்களாலும், அலங்கார மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது

நிகழ்வில் கலந்துகொண்ட தோழர்கள்: மு.நற்குணம், சா.செபஸ்தியான், சி.திருஞாண சம்பந்தம், பி.தியாகராசன், ச.துரைசாமி, சத்தியமூர்த்தி, சு.மகாமணி, சு.ராஜசேகர், ந.அறிவுசுடர், கருப்பு கோகுல், கருணாகரன்(காங்), பா.சேகர், வைரவேல், இ.சவேரியார், திருச்சி. வை.கோ., மு.புண்ணிய மூர்த்தி, ஜீ.சிவக்குமார். 

பெரியார் பிஞ்சுகள்:

சே.கலைக் கண்ணன், ம.தீனதயாளன், ம.திவ்யதர்ஷிணி, ரா.தமிழழகன், ரா.வீரா, சுரேஷ், ரவிச்சந்திரன், மற்றும் தோழர்கள், பொது மக்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர். 

தேனி

தேனியில் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த நாள் முன்னிட்டு தேனி மாவட்ட செயலாளர் பூ.மணிகண்டன் தலைமையில், மாவட்டத் தலைவர் ச.ரகு நாகநாதன்,  வெங்கடேஷ் - நகரத்தலைவர், லோ.முத்துச் சாமி - நகரசெயலாளர், செ.கண்ணன் மாவட்ட அமைப்பாளர், ஆசிர்வாதம் ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினர். 

இந்த பெரியார் பட ஊர்வலத்தை தேனி ஒன்றிய சேர்மன் சக்கரவர்த்தி தொடங்கி வைத்தார் , தி.மு.க நகர செயலாளர் நாரயண பாண்டியன், வீரபாண்டி சேர்மன் கீதா சசி, வி.சி.க நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், வி.சி.க ஊடக பிரிவு செயலாளர் அன்பு வடிவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மா.செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, சிபிஎம் தாலுகா செயலாளர் தர்மர், ஆதி தமிழர் பேரவை நிர்வாகிகள், ஜெய்பீம் புரட்சி புலிகள் மாநில அமைப்பாளர் அருந்தமிழரசு, மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன், தமிழ் புலிகள் கட்சி மாணவர் அணி மாநில பொறுப்பாளர், சமூக நல்லிணக்க பேரவை தலைவர் முகம்மது சபி, துணைதலைவர் ஜாகீர், மாநில கிருத்தவ பேரவை தலைவர் சம்மட்டி நாகராசன், தமிழக  ஒடுக்கப்பட்டோர் இயக்க (சிபிஅய்) மாவட்ட பொறுப்பாளர்கள் பிரவீந்திரன், செல்லான், கழக நகர அமைப்பாளர் பெ.சுரேஷ், ஆண்டி பட்டி தி.மு.க பொறுப் பாளர் கண்ணன், ஆண்டிபட்டி காங்கிரசு செயலாளர் ராஜா ராம், கண்டமனூர் பிரபு, சென்ட்ராயன்  மற்றும் ஊர்வலத்தில் இடம் பெற்ற தோழமை கட்சிகளின் பொறுப்பாளர்கள் ஆகியோர்கள் மற்றும்  நூற்றுக்கணக்கானோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டு சமூக நீதி, சமத்துவ முழக்கங்களுடன் சென்று, தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் தேனி நகர கழகம் சார்பில் அமைக்கப்பட்ட பெரியார் திடலில் பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். தேனி மாவட்ட இளைஞரணி தலைவர் பிரேம் குமார் நன்றி உரை நிகழ்த்தினார்.

காட்டுமன்னார்கோயில்

தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்தநாள் விழா காட்டுமன்னர் கோயில் ஒன்றியத்தின் சார்பில் அனைத்துக் கட்சி தோழர்கள் பங்கேற்புடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் ஆ.ஆனந்தபாரதி வரவேற்க, நகர அமைப்பாளர் சண்முகம் தலைமையேற்றார். திமுக சார்பாக பேரூராட்சி மன்றதலைவர்  கணேசமூர்த்தி, சமூகநீதி நாள் உரையாற்றினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  சட்டமன்ற தொகுதி துணைத்தலைவர் சக்திவேல் இராவணன் உறுதிமொழி கூற அனைத்துக் கட்சி தோழர்களும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் திமுக கருணாநிதி, மதிமுக ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், நகர செயலாளர்  செந்தில், சிபிஅய் முருகவேல் வ.செயலாளர், செந்தீ கலை இலக்கிய கழகத்தின் நாகராசன் மற்றும் அனைத் துக்கட்சி மற்றும் இயக்க தோழர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

குனியமுத்தூர்

கோவை, குனியமுத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா,கோவை மாவட்ட அமைப் பாளர் மு.தமிழ்செல்வம் தலைமையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.அலங்கரித்து வைக்கபட்ட அவருடைய படத்திற்கு, கோவை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் ர.தனலட்சுமி, குனியமுத்தூர் பகுதி தி.மு.க.செயலாளர் சி.லோகநாதன், குறிச்சி பகுதி தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.காதர், மேனாள் மாவட்ட தி.மு.க.செயலாளர் சு.முத்துசாமி ஆகி யோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி, உறுதிழொழி ஏற்றனர். கழகக் கொடியினை பேராசிரியர் தவமணி அம்மையார் ஏற்றி வைத்தார். நிகழ்வில் கோவை மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர், செயலாளர் தி.க.செந்தில் நாதன், மண்டல செயலாளர் ச.சிற்றரசு, மண்டல மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சின்னசாமி, மாவட்ட தொழிலாளரணி செயலாளர் வெங்கடாசலம், மாமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், இளஞ்சேகரன், வட்ட பிரதிநிதி மு.அல்லாபிச்சை, பகுதி துணை செயலாளர் மு.விஜயகுமார், இளைஞரணி பகுதி அமைப்பாளர் அ.சதாம் உசேன், ம.தி.மு.க. பகுதி செயலாளர் சண்முகம்,குனியமுத்தூர் பகுதிதலைவர் அ.செயக்குமார், தா.சூசைராசு, இளைஞரணி பெ.தழிழ்செல்வன், தி.மு.க.சமது, பாபு, செந்தில், தர்மன் மற்றும் திராவிடர் கழகம், மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகம், தொழிலாளரணி, தி.மு.க., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உட்பட திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.

கோவை, குனியமுத்தூர், அண்ணாநகரில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்குகோவை மாவட்டஅமைப்பாளர் மு.தமிழ்செல்வம் தலைமையில், கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மருதமலை சேனாதிபதி, கோவை மாநக ராட்சி தெற்கு மண்டல தலைவர் ர.தனலட்சுமி, குனியமுத்தூர் பகுதி தி.மு.க.செயலாளர் சி.லேகநாதன், குறிச்சி பகுதி தி.மு.க.செயலாளர் எஸ்.ஏ.காதர், மாவட்டதலைவர் ம.சந்திர சேகர், செயலாளர் தி.க.செந்தில்நாதன், மண்டல செயலாளர் ச.சிற்றரசு, மாவட்ட தி.மு.க.பிரதிநிதி மு.அல்லாபிச்சை ஆகி யோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி, உறுதிழொழி ஏற்றனர். கழகக் கொடியினை கோவை மாநகராட்சி தெற்குமண்டல தலைவர் ர.தனலட்சுமிஅவர்கள் ஏற்றி வைத்தார்.

நிகழ்வில் கோவை மாவட்ட கழக மண்டல மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சின்னசாமி, மாவட்ட தொழிலாளரணி செயலாளர் வெங்கடாசலம், மாமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், இளஞ்சேகரன், பாபு, பகுதி துணை செயலாளர் மு.விஜய குமார், இளைஞரணி பகுதி அமைப்பாளர் அ.சதாம் உசேன், ம.தி.மு.க. பகுதி செயலாளர் சண்முகம், விடுதலை சிறுத்தைகள் தொகுதி செயலாளர் முகமதலி குனியமுத்தூர் பகுதிதலைவர் அ.செயக்குமார், தர்மன், தா.சூசைராசு, இளைஞரணி பெ.தமிழ்செல்வன், தி.மு.க.சமது, முகமதுசேட், பாபு, செந்தில், மற்றும் திராவிடர் கழகம், மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகம், தொழிலாளரணி, தி.மு.க., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத் தைகள் உட்பட திராளான தோழர்கள் கலந்து கொண்டனர்.

தென்காசி

தென்காசி மாவட்டம் சுரண்டையில் தந்தை பெரியார் சிலை அமைப்பு விழா நடைபெற்றது. வே.ஜெயபாலன் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் தலைமையில் தந்தை பெரியார் சிலையினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார் மாவட்ட செயலாளர் பொ. சிவபத்மநாதன்.

செங்கல்பட்டு - பேரமனூர்

செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம்-பேரமனூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் திமுக 16ஆவது வட்ட செயலாளர் முன்னாள் வார்டு கவுன்சிலர் த.வினோத்குமார் தலைமையில் நீலகண்டன் விஜயராகவன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது 

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றிய செயலாளர் வே.பால முருகன், முருகன் ஆகியோர் தலைமையில் பெரியார் உணர்வாளர்கள் தோழமை கட்சியினர்கள்  பங்கேற்று கொள்கை முழக்கமிட சிறப்பித்தனர்.  பெரியார்  உணர் வாளர்கள்  பெ.சங்கர், ஆனந்தகுமார், முத்துகுமார், ஜெயராம், சேகர், பிடல்காஸ்ட்ரோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர்துரைராஜ், தமிழ்ப் புலி கட்சி. கணேசன். மற்றும் பொது மக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

பென்னாகரம்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் கடமடை பெரியார் பெருந்தொண்டர் பொதுக் குழு உறுப்பினர் அ. தீர்த்தகிரி தலைமையில் கடமடை பேருந்து நிலையம் பெரியார் நகர் மற்றும் பென்னாகரம் சமத்துவபுரம் ஆகிய இடங்களில் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது.

பள்ளிபாளையம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கழக சார்பில் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி சனாதன எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

குமாரபாளையம்

குமாரபாளையம் நகரக் கழகத்தின் சார்பாக நகரில் உள்ள அனைத்துக் கட்சிகள் மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்ட அமைப்புகள் அனைவரும் கூடி தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை மிக சிறப்பாக கொண்டாடி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். நகர காங்கிரஸ் தலைவர் ஜானகிராமன் கேக் வெட்டினார். திமுகவைச் சார்ந்த நகர் மன்ற துணைத் தலைவர் வெங்கடேசன் கேக் வழங்கினார்.

காவேரிப்பட்டணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தந்தைபெரியார் 144ஆவது ஆண்டு பிறந்தநாள் - சமூகநீதி நாளாக வெகு சிறப்பாக திராவிடர் கழகம் சார்பில் அனைத்து ஒன்றியங்களில் கழக கொடி ஏற்றி தந்தை பெரியார் சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.                                                             

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் உலக மனிதநேய மாண்பாளர் அறிவுலக பேராசான் தந்தை பெரியார் அவர்களின் 144ஆவது பிறந்த நாளையொட்டி காவேரிப்பட்டணம் காமராசர் பேருந்து நிலையத்திலிருந்து பெரியார்பட ஊர்வலம் பெரியார் படம் தாங்கி  ஊர்வலமாக சென்று பாலக்கோடு பிரிவு சாலை அருகில் உள்ள  தந்தை பெரியார் சிலைக்கு அனைத்து கட்சிகளின் சார்பில் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் கோ.திராவிட மணி தலைமை யில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு கள் வழங்கி சிறப்பாக கொண்டாப்பட்டது. நிகழச்சியில் காவேரிப்பட்டணம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் தேங்காய் சி.சுப்பிரமணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.எஸ். செந்தில்குமார், சிறுபான்மை பிரிவு மாவட்டத் துணை அமைப்பாளர் ஜே கே எஸ் சாஜித், ஒன்றிய துணைச் செயலாளர் இளங்கோவன், கவுன்சிலர்கள் தமிழ் செல்வி சோபன்பாபு, நித்தியா முத்துகுமார், ம.தி.மு.க.  அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் வி.கே. இளங்கோ, ஒன்றிய பொறுப்பாளர் மாதன், இந்திய மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜி.கே. நஞ்சுண்டன், பெரியசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர்கள் சசிகுமார், திருமுருகன், ஒன்றிய பொருளாளர் தொ.ரகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட குழு சங்கர், இராசேந்திரன், தமிழ்தேசிய குடியரசு இயக்க மண்டல செயலாளர் தி.குமார், மாவட்ட செயலாளர் விக்னேஷ், இராமமூர்த்தி, செல்வராஜ், உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகி சிவசங்கர், காவேரிப்பட்டணம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சங்க நிர்வாகி சரவணன், தேமுதிக  மாவட்ட இளைஞரணி நிர்வாகி கே. கோவிந்தராஜ்,  திராவிடர் கழக ஒன்றிய தலைவர் செல்வம், மாவட்ட அமைப்பாளர் தி.கதிர வன், ஒன்றிய செயலாளர் பெ.செல்வேந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் மதிமணியன், முன்னாள் ஒன்றிய தலைவர் சி. சீனிவாசன், திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் சுப்ரமணியம்,மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வெ.புகழேந்தி, முன்னாள் மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஆறுமுகம்,மருத்துவர் இ.ஆசைதம்பி, ஒன்றிய துணைத் தலைவர் சி ராஜா, நகர அமைப்பாளர் ராஜேந்திரபாபு உள்பட திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்த் தேசிய குடியரசு இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும் இனிப்புகள்வழங்கியும் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழ்நாடு அரசு ஆணைக்கிணங்க தந்தை பெரியார் பிறந்த நாள்-சமூக நீதி நாள் என உறுதிமொழி ஏற்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ள படி அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி கூறி  உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

சிதம்பரம்

பெரியார் விழா 17.9.2022 கிள்ளைமற்றும் பிச்சாவரத்தில் தி.மு.க நகர அவைத்தலைவர் குட்டியாண்டிசாமி தலைமை யில் மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன், அ.செங்குட்டு வன், வீரபாண்டியன் முன்னிலையில் கோபால்சாமி பெரியார் சிலைக்கு மலர்மாலை அணிவித்தார்.

சமூகநீதி நாள் உறுதிமொழி அனைவரும் கூறி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். உடன் துரை.செயபால், புவன கிரி ஆசீர்வாதம், நீதிமணி, (தலைவர் மீனவர்கள் கூட்டுறவு சங்கம்), இராஜேந்திர பிரசாத், (கிராம அவைத்தலைவர்) ஆகி யோர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

கரூர்

கரூரில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு 300 புத்தகங்கள் வழங்கப்பட்டன.

தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த நாளை முன்னிட்டு  கரூர் தாந்தோணி மலையில் உள்ளஅரசு கலை அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு திராவிடர் கழகத்தின் வெளியீடான "திராவிடர் மாணவர் கழகத்தில் ஏன் சேர வேண்டும்?", "தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு", "பெண் ஏன் அடிமையானாள்?", திராவிடர் கழகத்தில் ஏன் சேர வேண்டும் பெண்ணுரிமை தத்துவங்கள் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு போன்ற நூல்கள் கரூர் மாவட்டக் கழக மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமை யில் வழங்கப்பட்டன நிகழ்ச்சியில் மாவட்டத் துணை செயலாளர் ராஜு, மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் அலெக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு துண்டறிக்கை பிரசுரம் வழங்கி தந்தை பெரியாரின் நூல்கள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை பெரியார் மாளிகையில், 17.9.2022 சனி காலை 10 மணிக்கு, அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ந.ஆனந்தம் தலைமையில், மாவட்ட கழக செயலாளர் விடுதலை தி.ஆதவன் கொள்கை முழக்கத்துடன் கழகக் கொடியேற்றினார். மண்டல கழக இளைஞரணிச் செயலாளர் இரா.அழகர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். நகர் கழக செயலாளர் பா.இராசேந்திரன் இனிப்பு வழங்கினார். 

மாவட்ட துணைத்தலைவர் அ.தங்கசாமி, நகர ப.க. செயலாளர் பூ.பத்மநாதன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் நா.நாராயணன், செயலாளர் ச.சண்முகநாதன், நகர் தலைவர் சு.செல்வராசு,  ப.வெங்கடேசன், பொ.கணேசன், நா.அறிவழகன், மு.முனியசாமி மற்றும் கழகப் பொறுப் பாளர்கள் தோழர்கள் பங்கேற்றனர்.

மாவட்ட திராவிடர் மாணவர் கழக அமைப்பாளர் அ.பெரியார் செல்வம் நன்றி கூற விழா நிறைவுற்றது. தொடர்ந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நகரச் செயலாளர் தோழர் மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் பா.நாகராசன் மற்றும் தோழர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விடுதலை சிறுத்தைகள் இயக்க மாநிலப் பொறுப்பாளர்கள் தோழர் கலைவேந்தன், ஜோசப், குருசாமி மற்றும் தோழர்கள் பறை இசை முழக்கத் துடன் அணிவகுத்து வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழ்ப் புலிகள் இயக்க மாவட்டச் செயலாளர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தோழர்கள் மு.இளங்கோ, இரா.ஆற்றலரசு, முகிலன், வள்ளுவன் மற்றும் தோழர்கள் பறை இசை முழக்கத்துடன் அணிவகுத்து வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தினர். பங்கேற்ற அனைவருக்கும் நீட் எதிர்ப்பு இயக்கப் புத்தகம் வழங்கப்பட்டது.

விருதுநகர்

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் எதிரில், அறிஞர் அண்ணா சிலை அருகில், இந்திய பொதுவுடமை இயக்கம் சார்பில் தந்தை பெரியார் 144 ஆவது பிறந்த நாள் விழா நடை பெற்றது. சி.பி.அய். ஒன்றியச் செயலாளர் தோழர் சக்கணன் தலைமையில், நகரச் செயலாளர் எஸ்.முத்துக்குமார் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார். மாதர் சம்மேளன மாவட்டத் தலைவர் பி.மாரீஸ்வரி, ஏ.அய்.டி.யு.சி. தோழர் ஆர்.எஸ்.அலியார், மலர்க்கொடி, மாநில ப.க. துணைத்தலைவர் கா.நல்லதம்பி, மாவட்ட ப.க. தலைவர் பெ.த.சண்முகசுந்தரம், அமைப்பாளர் மா.பாரத், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாவட்ட அமைப்பாளர் தோழர் ராஜேஷ்,‌‌ ஆதிமூலம் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மொழிப் போர் வீரர் சங்கரலிங்கனார் திடலில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பெரியார் படத்திற்கு  மாலை அணிவித்தனர். நிறைவாக விருதுநகர் ஒன்றியம் செங்கோட்டை பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

காரைக்குடி

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சமூகநீதி நாள் விழாவாக காரைக்குடியில் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் பேராசிரியர் முனைவர் தங்க முனியாண்டி தலைமை தாங்கினார். காரைக்குடி கிளைத் தலைவர் திருமதி கலைவாணி வரவேற்புரை வழங்கினார். 

மாவட்டச் செயலாளர் அன்பரசன் தொடக்க உரை நிகழ்த்தினார். கிராமியப் பாடகர்கள் வைகை பிரபா, தமிழ்க் கனல், அரிய முத்து, பிரகதீஸ்வரன், சின்னக் கண்ணன் ஆகியோர் கிராமியப் பாடல்கள் பாடினர்.

கவிஞர்கள் சாதிக், காரை கிருஷ்ணா, மோகன், வெள்ளைச்சாமி, தமிழ் மதி நாகராசன், நாகநாதன் ஆகியோர் கவிச்சரம் தொடுத்தனர். 

தமுஎகச மாநிலக் குழு உறுப்பினர் எழுத்தாளர் ஜீவ சிந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலா ளர் அழகர்சாமி, காரைக்குடி திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் ம.கு வைகறை, பாரதி புத்தகாலயத்தின் ஜீவா னந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் கண்மணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் கவிஞர் முத்து நிலவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

தமுஎகச காரைக்குடி கிளையின் செயலாளர் சிவானந்தம் நன்றி கூறினார். 

கருத்தரங்க நிகழ்வில் கழக மாவட்ட துணை செயலாளர  இ.ப. பழனிவேல், கழக இளைஞரணி அமைப்பாளர் புருனோ, மாணவர் கழக செயலாளர் பிரவீன், ஆ.பால்கி,  துரை.செல் வம், மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment