உத்தரகாண்ட் மாநிலத்தில் மலைச்சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 10 பேர் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 5, 2022

உத்தரகாண்ட் மாநிலத்தில் மலைச்சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 10 பேர் பலி

டேராடூன், அக். 5- உத்தர காண்ட் மாநிலத்தில் ஏற் பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கி, மலையேறும் பயிற்சி பெறும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேரை மீட்புப்படையி னர் மீட்டுள்ளனர், 

மேலும் 11 பேரை காணவில்லை. அவர் களை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். உத் தரகாண்ட் மாநிலத்தில்  திரவுபதியின் தண்டா 2 என்ற மலை சிகரம் உள் ளது. இது கடல் மட்டத் தில் இருந்து 16,000 அடி உயரத்தில் உள்ளது. நேற்று மலையேறும் பயிற்சி செய்யும் 29 பேர் இந்த மலை சிகரத்தில் ஏறினர். காலை 9 மணியள வில் யாரும் எதிர்பார்காத சூழ்நிலையில் மிக பெரிய அளவில் பனிச் சரிவு ஏற்பட்டது.

இதில் சிக்கி 10 பேர் பலியாகிவிட்டனர். 8 பேரை மீட்பு படையினர் மீட்டனர். 11 பேரை காணவில்லை. பனிச் சரி வில் சிக்கிய 11 போரையும் மீட்கும் முயற்சியில்  தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில மீட்பு படையினர் ஆகியோர் ஈடுபட்டுள்ளர். மீட்புப் பணியில் இந்திய விமா னப் படையினரும் ஈடு பட்டுள்ளனர். மீட்புப் பணிக்கு 2 சீத்தா ரக ஹெலிகாப்டர்களை விமான படையினர் ஈடு படுத்தியுள்ளனர். பனிச் சரிவில் சிக்கிய அனை வரும் நேரு மலையேறும் இன்ஸ்டியூட்டில் பயிற்சி பெற்று வருபவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மலையேறும் பயிற்சியாளர்களில் சிலர் காயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்த அனை வரும் 13,000 அடியில் உள்ள ஹெலிபேட் அமைந்து இருக்கும் இடத் திற்கு கொண்டு வரப்பட்டு உத்தராகண்ட்  தலைநகர் டேராடூன் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளதாக உயரதி காரிகள் தெரிவித்தனர். இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையினரும் மீட் புப் பணியில் ஈடுபட்டுள் ளதாக உத்தராகண்ட்  முதலமைச்சர் அலுவல கம் தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment