இருளர் - பழங்குடி சமூகத்தினரின் மேம்பாட்டிற்கான வீட்டு வசதி திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 3, 2022

இருளர் - பழங்குடி சமூகத்தினரின் மேம்பாட்டிற்கான வீட்டு வசதி திட்டம்

திருவள்ளூர்,செப்.3  தமிழ்நாட்டின் மிகவும் சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய பழங்குடியினரில் ஒன்றான இருளர் சமூகத்தினருக்கான வீட்டுத் திட்டத்தை, வெல்ஸ் பார்கோ நிறுவனத்துடன் இணைந்து ஹபிடேட் ஃபார் ஹ்யூமனிட்டி என்னும் இலாப நோக்கற்ற அமைப்பு வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. தங்கள் வீடுகளை கட்டி முடிக்க முடியாமல் அவதியுற்று வந்த திருவள் ளூரை சேர்ந்த 43 இருளர் பழங்குடியின குடும்பங்களுக்கு வீட்டு கட்டி கொடுத்துள்ளது.  

இது குறித்து ஹபிடேட் ஃபார் ஹ்யூமனிட்டி அமைப்பின்  நிர்வாக இயக்குநர் டாக்டர் ராஜன் சாமுவேல் கூறுகையில், "இருளர் பழங்குடியினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான எங்களது  இந்த முயற்சிகள், அவர்களது குடும்பங்கள் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கத் தேவையான வலிமை, உறுதித்தன்மை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை அடைய ஆரோக்கியமான வீடுகள் உதவுகின்றன என்ற உறுதியான நம்பிக்கையால் செயல்படுத்தப்படுகிறது. இது வறுமையின் தளைகளை உடைப்பதற்கான அடித்தளத்தை அவர்களுக்கு வழங் குகிறது. இந்த வீடுகளை வெற்றிகரமாக முடிக்கவும், அவர்களுக்கு வசதியான வாழ்க்கையை உறுதி செய்ததற் காகவும் வெல்ஸ் பார்கோ நிறுவனத்திற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்" என்று தெரிவித்தார்.


No comments:

Post a Comment