அனைத்து ஜாதியினருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 6, 2022

அனைத்து ஜாதியினருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்

சென்னை, செப். 6- அகில இந்திய பிற்படுத் தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார் பில் 3.9.2022 அன்று சென்னை பத்திரிகையா ளர் சங்கத்தில் நடைபெற்ற பத்திரிகை யாளர் சந்திப்பில் கீழ் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளை ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிட வலி யுறுத்தப்பட்டது.

ஒன்றிய  அரசில்    இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கு  (OBC  –-ஓபிசி பிரிவினருக்கு) கல்வி மற்றும் வேலைவாய்ப் பில் இடஒதுக்கீடு முறையாக செயல் படுத்தப்படாததால், அதிகார மய்யத் தில் ஓபிசி பிரிவினர்  தங்களுக்கு உரிய பங்கு பெற முடியவில்லை.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், இன்னும் ஒன்றிய அர சின் குரூப் ‘ஏ’ உயர் அதிகாரிகள் நிலை யில் 13 சதவீதம் மட்டுமே உள்ளனர்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தமிழ்நாடு நலன் சார்ந்த பின்வரும் கோரிக்கைகளை ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிட வலி யுறுத்துகிறோம்.

1. ஓபிசி பிரிவினர் உள்ளிட்ட அனைத்து ஜாதியினருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

2. பொதுத்துறை நிறுவனங்கள், அரசுத் துறைகள் தனியார் மயமாக்கப் பட கூடாது.

3. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை உடனடியாக நிய மிக்கப்பட வேண்டும்.

4. கிரீமிலேயர் முறை முற்றிலும் நீக்கப்பட வேண்டும். இது நிறைவேறும் வரை, தற்போது நடைமுறையில் உள்ள ரூ. 8 லட்சம் வருமான உச்சவரம்பு திருத்தப்பட வேண்டும். இதில் சம்பள / விவசாய வருமானத்தினை, கிரீமிலே யர் வரையறை செய்திடும் வருமான அளவுகோல்களின் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட கூடாது.

5. மண்டல் குழு பரிந்துரையின் படி, பிற்படுத்தப்பட்டோருக்கு பதவி உயர்வு, நீதித்துறை மற்றும் தனியார் துறையில் இட ஒதுக்கீடு அளித்திட சட்டம் நிறைவேற்றுக.

6. இடஒதுக்கீட்டின் மீதான 50% உச்சவரம்பு  நீக்கப்பட்டு, மண்டல் குழு அறிக்கையின்படி ஓபிசி பிரிவினருக்கு 52 சதவீத ஒன்றிய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளிக்கப் பட வேண்டும்.

7. உயர் ஜாதியினருக்கு பொருளா தார அடிப்படையில் 10% இட ஒதுக்கீட்டு ரத்து செய்யப்பட வேண்டும்.

8. தமிழ்நாட்டில் ஓபிசி சான்றிதழ் வழங்கப்படுவதில் உள்ள சிக்கல் சரி செய்யப்பட்டு, உடனடியாக சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

9. ஓபிசி பிரிவினருக்கு தனி அமைச்சகம்.

10. ஓபிசி நலனுக்கான போதுமான பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் ஒன்றிய அர சின் பட்ஜெட்டில் ஓபிசி பிரிவினருக் கான சிறப்பு கூறு திட்டம்  (Special Component Plan)உருவாக்க வேண்டும்.

11. ஒன்றிய அரசு நடத்தும் மாநில/வட்டார பணி நியமனங்களில் (Local and Regional recruitment)  ஓபிசி பிரிவினருக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன இருக்கை அளித்த தீர்ப்புக்கு எதிராக 27 சதவீதத்தினைக் குறைப்பதை நிறுத்த வேண்டும். மேலும், 50% உச்ச வரம்பிற்குட்பட்டு, வாய்ப்புள்ள மாநி லங்களில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு கொடுத்தது போல 27 சதவீதத்திற்கு மேல் (உ.ம்.: தமிழ்நாட்டில் மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தில் 30% ஆக) உயர்த்தவும் வேண்டும்.

12. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் (NCBC) கிளைகள் ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் அமைக்க வேண்டும்.

13. நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட அப்ரண்டிஸ் சட் டம் 2007இன் படி  (Apprentice Act OBC reservation amendment Act 2007)  ஓபிசி இட ஒதுக்கீடு மாநில மக்கள் தொகை அடிப்படையில் (உ.ம். தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் 76%) இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

ஓபிசி கூட்டமைப்பு சார்பில், பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி மற்றும் துணைத் தலைவர்கள்: எம்.இளங்கோ வன் (அய்.அய்.டி), ஏ.ராஜசேகரன் (அய். ஓ.பி), பொருளாளர் எஸ்.பிரபாகரன் ( நியூ இந்தியா அஸ்யூரன்ஸ்), செயலா ளர்கள்: எஸ்.அன்புகுமார் (அய்.சி.எப்), டி.துரைராஜ் (சி.பி.சி.எல்), டி.முத்துக் குமரன் (எம்.எப்.எல்.) மற்றும் வி. .கமலக் கண்ணன் (தலைவர், ஜிஅய்சி-யுனை டெட் இந்தியா), யூனியன் வங்கி ஓபிசி சங்க அ.இ.பொதுச் செயலாளர் எம். பாக்யராஜ், இணைச் செயலாளர் எஸ். சத்தியமூர்த்தி, ஆலோசகர் கே.சந்திரன், மற்றும் ஆர்.பழனியப்பன் (சிபிசிஎல் ஓபிசி சங்கம்), ஆர்.உதயகுமார், வி. ஞான மூர்த்தி (கனரா வங்கி ஓபிசி சங்கம்) ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment