"பெரியாரியம்" எனும் பகுத்தறிவுப் பேராயுதம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 28, 2022

"பெரியாரியம்" எனும் பகுத்தறிவுப் பேராயுதம்!

செப்டம்பர் 17, தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த நாள், சமூகநீதி நாள்.

"பெரியாரியம்" என்பது மனி தனை மனிதனாக மதிப்பதே, ஆனால் அன்று! ஓர் நூற்றாண்டுக்கு முன்பு; தமிழ் சமூகத்தில் மனிதனை மனிதன் தொடக் கூடாது, தொட்டால் தீட்டு! பார்க்காதே, நெருங்காதே, என்றெல்லாம் சொன்னதோடு "படிக் காதே" என்று சொன்னது ஆரிய மாடல்! "படி" என்று சொன் னது திராவிட மாடல்!! திராவிட சமுதா யத்திற்கு மானமும், அறிவும் பிறந்து ஜாதித் தீண்டாமை ஒழித்து, சமத் துவமும், சமூகநீதியும், உரிமைகளும் கிட்டிட தமது வாழ்நாளில் எதிர்நீச்சல் அடித்து, பல போராட் டங்கள் நடத்தி போராடி, சமூகநீதியை நிலைநாட்டி, வெற்றி கண்டவரே நம் சமூகநீதிப் போராளி தந்தை பெரியார்.

இத்தகைய சமூகநீதிப் போரில் "பெரியாரியம்" எனும் பகுத்தறிவுப் பேராயுதத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களை சுயமாக சிந்திக்க செய்து வாழ வைத்தவர் தந்தை பெரியார். "மானமும், அறிவும், மனிதர்க்கு அழகு" என்றார் பெரியார்! இதன்படி மனிதனுக்கு தன்மானம், சுயமரி யாதை, அறிவுடன், பகுத்தறிவுடன் வாழ்தல் மிக முக்கியம் என்பதை வலியுறுத்தினார். மேலும் மனித சமூ கத்தில் "அனைவருக்கும் அனைத் தும்" கிடைக்கும் வண்ணம் வழி வகை செய்தார் பெரியார். அனைத் துச் சமுதாய மக்களும் ஜாதி, வேறு பாடு இன்றி ஒற்றுமையுடன் வாழ் வதற்காகவே 'சமத்துவபுரம்" தந்தை பெரியார் பெயரால் உருவாக்கப் பட்டது.

இவைகளுடன் தந்தை பெரியார் சுயமரியாதைத் திருமணங்கள் நடத்தி காட்டி "ஜாதித் தீண்டாமைக்கு' முற்றுப் புள்ளி வைத்தார்.

எனவே பார்ப்பனரின் ஆரிய ஆதிக்கத்தை, அடிமைத்தனத்தை எதிர்க்கவே "பெரியாரியம்" எனும் பகுத்தறிவுப் பேராயுதம் பயன்படுத்தி தமிழர்கள் தன்மானம், இனமானம் காத்து, சுயமரியாதை, அறிவுடன், பகுத்தறிவுடன் சிந்தித்து செயல்பட்டு அடிமை வாழ்க்கை ஒழித்து சுயமரியாதை வாழ்க்கை வாழ்ந்தனர்.

இதன்படி "பெரியாரியம்" எனும் பகுத்தறிவுப் பேராயுதம் தலை குனிந்து வாழ்ந்த தமிழர்களை தன்மானம், இனமானம் காத்து, சுயமரியாதை, அறிவு, பகுத்தறிவுடன் தன்னம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து வாழ வைத்தது. இன்று! தந்தை பெரியாரின் வழி நடக்கும், செயல் பட்டு உழைக்கும் தமிழர் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் 89 வயதிலும், துடிப்பாக இளைஞரை போல செயல்படும் அவரின் சுறு சுறுப்பு, ஓய்விலா உழைப்பு பாராட் டுக்குரியது. மேலும் "விடுதலை" நாளேட்டின் ஆசிரியராக பணிபுரிந்து 60 ஆண்டுகள் நிறைவு பெறுவது "சாதனைக்குரிய செயல்" எனலாம்.

எனவே தமிழ்நாட்டில் நீதிக்கட்சி முதல் 'திராவிட மாடல்' ஆட்சி வரை "பெரியாரியம்" எனும் பகுத்தறிவுப் பேராயுதம் பயன்படுத்தி சனாதனம் தோற்றது; திராவிடம் வென்றது! ஏன் எனில்?

இது பெரியார் மண்!

இது திராவிட மண்!!

- புலவர் திராவிடதாசன்

பொதுச் செயலாளர், திராவிட மக்கள் சமூகநீதிப் பேரவை, பம்மல், சென்னை - 600 075.

No comments:

Post a Comment