உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 28, 2022

உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு

புதுடில்லி,செப்.28- அரசியல் சாசன அமர்வில் நடைபெறும் வழக்கு விசாரணையின் நேரலை ஒளிபரப்பை உச்ச நீதிமன்றம் நேற்று (27.9.2022) தொடங்கியது.

உச்ச நீதிமன்றத்தில் அரசி யல் சாசன அமர்வில் நடை பெறும் அனைத்து வழக்கு விசாரணையையும் நேரலை ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி ஸ்வப்னில் திரிபாதி என்பவர் வழக்கு தொடுத்தார். இதன் மூலம் பொதுமக்கள் நலன் சார்ந்த வழக்குகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முடியும் என மனுவில் கூறியிருந்தார். இதை விசாரித்த உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வில் நடைபெறும் அனைத்து வழக்கு விசாரணை களும் படிப்படியாக நேரலை ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இப் போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் கடந்த 20ஆம் தேதி நடை பெற்ற அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில், ஸ்வப்னில் திரிபாதி வழக்கில் 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை 27ஆம் தேதி முதல் அமல்படுத்துவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதன்படி, அரசியல் சாசன அமர்வு விசாரணையின் நேரடி ஒளி பரப்பு நேற்று தொடங்கியது. இனிமேல், உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையை பொதுமக்கள் தங்கள் செல்போன், லேப் டாப் மற்றும்கணினிகளில் நேரலையாக காண முடியும்.

இதனிடையே, பாஜக மேனாள் நிர்வாகி கே.என். கோவிந்தாச்சார்யாவின் வழக்குரைஞர் உச்ச நீதிமன் றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில், “உச்ச நீதிமன்ற நட வடிக்கைகளை நேரலை ஒளி பரப்பு செய்யும் காப்புரி மையை யூடியூப் போன்ற தனியாரிடம் விட்டுவிடக் கூடாது” எனக் கோரி உள்ளார்.

இதுகுறித்து தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு கூறும்போது, “தற்காலிகமாக யூடியூபில் நேரலை ஒளிபரப்பு தொடங் கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கென தனியாக ஒரு தளம் நிறுவப்படும். காப் புரிமை விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றனர். இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன்பு தலைமை நீதிபதியாக இருந்த என்.வி. ரமணா கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஓய்வு பெற்றார். அன்றைய தினம் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நடை பெற்ற நிகழ்ச்சிகள், உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக நேரலை ஒளிபரப்பு (வெப்காஸ்ட் போர்ட்டல்) செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment